பொது செய்தி

தமிழ்நாடு

குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு; மாற்று இடத்திற்கு மாற்ற கோரிக்கை

Added : செப் 12, 2020
Share
Advertisement

ஓசூர்: ஓசூர் அருகே, குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள், குடியிருப்பு இல்லாத பகுதியில் அமைக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர். ஓசூர் அடுத்த, ஒன்னல்வாடி பஞ்.,க்கு உட்பட்ட விஷ்ணு நகர் பகுதியில், பஞ்., நிர்வாகம் சார்பில், மட்கும், மட்காத குப்பை தரம் பிரிக்கும் கிடங்கு அமைக்க முடிவு செய்யப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன. இதையறிந்த விஷ்ணு நகர் மற்றும் அதை சுற்றியுள்ள அம்மன் நகர், காவேரி நகரை சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட மக்கள், ஓசூர் அனைத்து குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பு தலைவர் துரை தலைமையில் எதிர்ப்பு தெரிவித்தனர். ஓசூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராமச்சந்திரன், பொறியாளர் சியாமளா ஆகியோர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இப்பகுதியில் குப்பை கிடங்கு அமைத்தால் சுகாதார சீர்கேடு ஏற்படும் என்றும், குப்பை எரிக்கும் போது, மக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்படும், குடியிருப்பு இல்லாத பகுதியில் குப்பை கிடங்கு அமைக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்தனர். இறுதியாக, ஓசூர் தாசில்தார், ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் மனு கொடுத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X