பொது செய்தி

தமிழ்நாடு

தென்பெண்ணை ஆற்று நீரை சுத்திகரிக்க வேண்டும்: தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்தல்

Added : செப் 12, 2020
Share
Advertisement

ஓசூர்: 'கர்நாடகா மாநிலத்தில் இருந்து வரும், தென்பெண்ணை ஆற்று நீரை சுத்திகரிக்க வேண்டும்' என, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.


ஓசூர் அருகே, பேலகொண்டப்பள்ளியில், தளி மற்றும் ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களான பிரகாஷ், சத்யா ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: கர்நாடகா மாநிலத்தில் உற்பத்தியாகும் தென்பெண்ணை ஆற்று நீர், கெலவரப்பள்ளி அணையில் சேமிக்கப்பட்டு, உபரி நீர் திறந்து விடப்படுகிறது. மழை காலங்களில் கர்நாடகாவில் இருந்து ரசாயனம், கழிவு நீர் கலந்து வருவதால், கெலவரப்பள்ளி அணையில் இருந்து கூடுதல் நீர் திறக்கும் போது, ரசாயன நுரை தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு, விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். தென்பெண்ணை ஆற்று நீரை நம்பி, கிருஷ்ணகிரி உட்பட ஐந்து மாவட்ட விவசாயிகள், பொதுமக்கள் உள்ளனர். கர்நாடகா மாநில அரசு, தென்பெண்ணை ஆற்றில் நீரை சுத்திகரித்து விட வேண்டும் என, தமிழக அரசு வலியுறுத்தாமல் உள்ளது. கெலவரப்பள்ளி அணை அருகே சுத்திகரிப்பு நிலையம் இருந்தால் கூட, தொழிற்சாலைகளுக்கு தினமும் ஒன்றரை கோடி லிட்டர் தண்ணீரை சுத்திகரிக்காமல் வழங்கி வருகின்றனர். தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன், கொடியாளம் அருகே அணை கட்டி, தென்பெண்ணை ஆற்று நீர் சுத்திகரிப்பு செய்யப்படும். சுற்றுச்சூழலை தனியாருக்கு தாரை வார்க்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எனவே மக்களுடன் கைகோர்த்து, போராட்டம் நடத்துவோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X