சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட இருவரை தேடும் பணி தீவிரம்

Added : செப் 12, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: தென்பெண்ணை ஆற்றில், குளிக்கும் போது அடித்து சென்ற இரண்டு இளைஞர்களை, தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்.


கிருஷ்ணகிரி, மோகன்ராவ் காலனியை சேர்ந்த யாசிர், 19, அவர் சகோதரிகள் மிஸ்பா, 21, மோராஜ், 22, மற்றும் பெங்களூருவை சேர்ந்த இர்பான், 26, ஆகிய நான்கு பேரும் இரண்டு இரு சக்கர வாகனங்களில் நேற்று மாலை, 5:30 மணிக்கு கிருஷ்ணகிரி அடுத்த கும்மனூர் கிராமம் அருகே தென்பெண்ணை ஆற்றுக்கு சென்றனர். அங்கு, யாசிர், இர்பான் ஆகிய இருவரும் ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர். கெலவரப்பள்ளி அணையில் இருந்து நேற்று, 960 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், ஆற்றில் அதிகளவில் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதை அறியாத இவர்கள், ஆற்றில் குளித்தபோது, நீரின் வேகத்தில் அடித்து செல்லப்பட்டனர். இதை பார்த்து, மற்ற இருவரும் கூச்சலிட்டனர். அருகில் இருந்தவர்களால் மீட்க முடியவில்லை. கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலைய அலுவலர் சந்திரன் தலைமையிலான, வீரர்கள் நீரில் அடித்து சென்ற இருவரையும் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X