சம்பவம் செய்தி

தமிழ்நாடு

புல்லட் திருட முயன்ற வாலிபர்: போலீசில் ஒப்படைத்த மக்கள்

Added : செப் 12, 2020
Share
Advertisement

ஓசூர்: ஓசூர் அருகே, புல்லட்டை திருடி செல்ல முயன்ற வாலிபரை, கட்டி வைத்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள், ஹட்கோ போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஓசூர் அடுத்த ஆலூர் வழியாக, வாலிபர் ஒருவர் நேற்று காலை புல்லட்டை திருடி கொண்டு தப்பி செல்ல முயன்றார். இதையறிந்த அப்பகுதி மக்கள், வாலிபரை பிடித்து, கட்டி வைத்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். ஹட்கோ போலீசார் விசாரணை நடத்தினர். இதில், பேரிகை அடுத்த புரனப்பள்ளியை சேர்ந்த ராம்குமார், 22, என்பதும், அவர் அம்ரீஸ், 35, என்பவரது புல்லட்டை திருடி சென்றதும் தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X