தமிழ்நாடு

செந்தில் பாலாஜியின் நண்பர் 'மாஜி' உதவியாளர் வீடுகளில் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை

Added : செப் 12, 2020
Share
Advertisement

கரூர்: அரவக்குறிச்சி தி.மு.க.,- எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜியின் நண்பர் மற்றும் உதவியாளர் வீடுகளில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.


கரூர் மாவட்டம், ராமேஸ்வரபட்டியை சேர்ந்தவர் செந்தில் பாலாஜி, 45; தற்போது, கரூர் மாவட்ட, தி.மு.க., பொறுப்பாளராகவும், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ.,வாகவும் உள்ளார். இவர், 2011-15ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில், போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில், 81 பேரிடம், 1.62 கோடி ரூபாய் பெற்றுக் கொண்டு வேலை வாங்கி தருவதாக கூறி, பண மோசடி செய்ததாக, சென்னை அம்பத்தூரை சேர்ந்த கணேஷ்குமார், 2017ல் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இதுதொடர்பான வழக்கு சென்னையில் உள்ள எம்.பி.,- எம்.எல்.ஏ.,க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடக்கிறது. நேற்று காலை, 7:00 மணிக்கு கரூர் அருகே வெங்கமேட்டில் உள்ள, செந்தில் பாலாஜியின் நண்பர் சண்முகம், 45, புகளூரை சேர்ந்த முன்னாள் உதவியாளர் கார்த்திக், 35, ஆகியோர் வீடுகளில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, இருவரும் வீடுகளில் இல்லை. சிறிது நேரத்தில் போலீசார் புறப்பட்டு சென்றனர். மேலும், செந்தில் பாலாஜியிடம் தற்போது உதவியாளராக உள்ள சுப்ரமணி, 40, என்பவரின் வீடு உள்ள மூர்த்திப்பாளையம் பகுதிக்கு, குற்றப்பிரிவு போலீசார் சென்றனர். அப்போது, சுப்ரமணி வீடு குறித்து தகவல் கேட்டுவிட்டு, குற்றப்பிரிவு போலீசார் புறப்பட்டு சென்றனர். கடந்த ஜனவரி மாதம், ராமேஸ்வரபட்டியில் உள்ள செந்தில் பாலாஜியின் வீடு, கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அவரது தம்பி அசோக்குமாரின் அலுவலகம் ஆகியவற்றில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X