தமிழ்நாடு

பயணியர் கூட்டம் அலைமோதுவதால் தொற்று அபாயம்

Added : செப் 12, 2020
Share
Advertisement

சேலம்: பஸ்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்ட நிலையில், பயணியர் கூட்டம் அதிகரித்துள்ளதால், தொற்று பரவல் அபாயம் ஏற்பட்டுள்ளது.


கடந்த, 1 முதல், மாவட்டங்களுக்குள் பஸ்கள் இயங்க தொடங்கியது. இயக்கத்துக்கு அனுமதி அளித்த அரசு, 54 சீட்டுகளை கொண்ட பஸ்களில், 30 பயணியர், 47 சீட்டு பஸ்களில், 24 பயணியரை அனுமதிக்க அறிவுறுத்தியது. முக கவசம் அணிய, கிருமிநாசனி பயன் படுத்த அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து, 8 முதல், மாவட்டங்கள் இடையே பஸ்கள் இயக்கப்படும் நிலையில், பயணியரின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. அதேநேரம், 1ல், 5,100 பஸ்கள் இயக்கப்பட்ட நிலையில், பயணியர் எண்ணிக்கை அதிகரிப்பால், நேற்று, பஸ்களின் எண்ணிக்கை, 11 ஆயிரத்தை தாண்டி விட்டது. இருப்பினும், பயணியர் அதிகளவில் ஏற்றப்படுகின்றனர். குறிப்பாக, 54 சீட்டு பஸ்களில், 60 பயணியருக்கு மேலும், 47 சீட்டு பஸ்களில், 50 பயணியருக்கு மேலும் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால், சமூக இடைவெளி இல்லாததோடு, பலர், முக கவசமும் அணிவதில்லை. இதனால், கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, பயணியர் குற்றம்சாட்டுகின்றனர். இதுகுறித்து, கண்டக்டர், டிரைவர் கூறியதாவது: பஸ்களில், வசூல் ஒன்றை குறிக்கோளாக கொண்டு அதிகாரிகள் செயல்படுகின்றனர். குறைந்த அளவில் பயணியர் இருந்தால், அதிகாரிகள், 'மெமோ' கொடுப்பது, பணி வழங்காமல் இழுத்தடிக்கும் செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால், அரசின் அறிவுரை காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது. கொரோனா அதிகளவில் பரவும் முன், போக்குவரத்து துறை, போலீசார், சுகாதாரத்துறை அதிகாரிகள், அரசு பஸ்களில் ஆய்வு நடத்தி, விதிமீறலை தடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X