சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மொபட் ஓட்ட கற்றுத்தந்தபோது வாகனம் மோதியதில் தம்பதி சாவு

Added : செப் 12, 2020
Share
Advertisement

ஓமலூர்: மனைவிக்கு, மொபட் ஓட்ட, கணவர் கற்றுத்தந்துகொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், தம்பதி உயிரிழந்தனர். சேலம் மாவட்டம், தாரமங்கலம், சங்ககிரி சாலையை சேர்ந்த, சின்னபரமன் மகன் பழனிசாமி, 42; மளிகை கடை வைத்திருந்தார். இவரது மனைவி மல்லிகா, 40. இவர்களுக்கு, ஒரு மகன், மகள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு, பழனிசாமி, தன் மனைவிக்கு, டி.வி.எஸ்., 50 மொபட் ஓட்ட கற்றுத்தந்தார். தாரமங்கலம், ஏ.டி.சி., பணிமனை அலுவலகம் அருகே, தேசிய நெடுஞ்சாலை, புறவழிச்சாலையில் சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், தம்பதி தூக்கிவீசப்பட்டனர். அவர்கள் படுகாயம் அடைந்து, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு, இருவரும் உயிரிழந்தனர். தாரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X