பொது செய்தி

தமிழ்நாடு

அறிகுறி இருந்தால் அசைவம் தவிர்...

Added : செப் 12, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 அறிகுறி இருந்தால் அசைவம் தவிர்...

அலோபதி மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கப்படும்போது, கொரோனா நோயாளிகளுக்கு சாப்பாட்டில் எந்தக் கட்டுப்பாடும் இல்லை. காலையும் இரவும் டிபன், மதியம் சாப்பாடு போக, இடையில் முட்டை, பயறு, முளைக்கட்டிய தானியம் என்று சிறப்பான கவனிப்பு என்றுதான் எல்லோரும் சொல்கிறார்கள்.

சித்த மருத்துவ முறையிலும் உணவில் பெரிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதில்லை. ஆனால், ஆயுர்வேதத்தில் உணவுக் கட்டுப்பாடு அவசியம். மிக முக்கியமாக, குளிர்ச்சியான ஆகாரம், ஐஸ்கிரீம், கூல்டிரிங்ஸ் தவிர்க்க வேண்டுமென்பது ஆயுர்வேத மருத்துவர்களின் அன்புக்கட்டளை.

புழுங்கல் அரிசி கஞ்சியை அல்லது வடித்த சாதத்துடன் பயத்தம் பருப்பு, தணியா, மிளகாய், சீரகம் தட்டிபோட்டு சாப்பிடலாம். பால், நெய், தயிர் சாப்பிட அனுமதியில்லை. காய்ச்சல் இருக்கும் போது அசைவ உணவுக்கு தடை போடச் சொல்கின்றனர். காய்ச்சல் சரியான பின், ஆறு நாட்களுக்கு, பால், நெய்,கொழுப்பில்லாத அசைவ சூப் சாப்பிடலாம்.

உணவைத் தவிர்த்து, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பலவிதமான மருந்துகள் ஆயுர்வேதத்தில் பரிந்துரைக்கப்படுகின்றன. திரிபுலா சூரணத்தை சுடுதண்ணீரில் கலக்கி, தொண்டையில் படும்படி கொப்பளிக்கலாம். அனு தைலத்தை மூக்கிலும் இரண்டு சொட்டு போட்டு இழுக்கலாம். இவை, சளி, இருமல், மூச்சுத்திணறல் ஆகியவற்றிலிருந்து நம்மைக் காக்கும் என்கின்றனர், ஆயுர்வேத மருத்துவர்கள்.கொரோனாவுக்கு ஆயுர் வேதத்தில் சிகிச்சை அளிப்பதை அனுமதிப்பதற்கு, தமிழக அரசு முதலில் தயங்கியது.

ஆனால், சித்தா மற்றும் ஆயுர்வேத மருந்துகளில் பலரும் முழுமையான குணம் பெற்றதை அறிந்து, இதற்கு இப்போது தடையாக நிற்கவில்லை. ஆயுர்வேத சிகிச்சைக்கு கேரள அரசுதரும் முக்கியத்துவத்தை தமிழக அரசு தரவில்லை என்ற வருத்தம், ஆயுர்வேத மருத்துவர்களிடம் உள்ளது.ஆயுர்வேதமெனும் ஆரோக்கிய வாயிலையும் அரசு திறந்து வைப்பது நல்லது!


70 ஆயிரம் பேருக்கு மருந்து!

''அறிகுறி குறைவாக இருந்த, 69 நோயாளிகளுக்கு ஆயுர்வேத மருத்துவ முறையில் சிகிச்சை அளித்ததில் ஒரு வாரத்துக்குள் அனைவரும் முழுமையான குணம் பெற்றுள்ளனர். இது மற்றவர்களுக்கும் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அரசு மருத்துவமனைகளின் அனைத்து புறநோயாளிகள் பிரிவிலும் இந்து காந்த கஷாயம் வழங்கப்படுகிறது. அதை உட்கொள்வது நல்ல பலன் தருகிறது. இதுவரை, 70 ஆயிரம் பேருக்கு இந்த மருந்து இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.
-ஜே.ரோஷன் சமீர்,
உதவி மருத்துவ அலுவலர்,
ஆயுர்வேத மருத்துவம்.


'ஐந்தே நாளில் குணமாவர்!'

''கொரோனா அறிகுறிகள் குறைவாக உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அரசு அனுமதித்துள்ளது.அத்தகைய அறிகுறியுடன் வந்தவர்களுக்கு ஆயுர்வேத சிகிச்சை அளித்ததில் அதிகபட்சம், 10 நாட்கள், குறைந்தபட்சம் ஐந்துநாட்களுக்குள் குணமடைந்து உள்ளனர். சந்தேகத்துக்குரிய நோயாளிகளுக்கு வீடுகளிலேயே சிகிச்சை அளித்ததில் அவர்களும் நலமடைந்துள்ளனர். எல்லோருமே 100 சதவீதம் குணமாகியுள்ளனர் என்பதுதான் இந்த மருத்துவத்தின் சிறப்பு.-கே. பாபு, உதவி மருத்துவ அலுவலர் ஆயுர்வேத மருத்துவம்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
13-செப்-202007:45:56 IST Report Abuse
Darmavan அரசு இந்நாட்டு மருந்துகளை அனுமதிக்காது அல்லோபதியை ஆதரிக்க காரம் கூட்டு கொள்ளை என்று சந்தேகம். ஆச்பிடல் மாபியாக்களுடன் கூட்டு .பெரும் ஆத்துக்கு ஏற்ப செயல்பாடு. கேவலம்.ஒரே நாளில் குணப்படுத்துவேன் என்ற திருத்தணிகாசலத்துக்கு குண்டர் சட்டம்.இரட்டை வேடம்.ஹிந்தி எதிர்ப்பு போல்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X