பொது செய்தி

தமிழ்நாடு

உரக்கடை மையங்களில் இணை இயக்குனர் ஆய்வு

Added : செப் 12, 2020
Share
Advertisement

குளித்தலை: குளித்தலை வட்டாரத்தில் உள்ள சில்லரை விற்பனை உரக்கடை மையங்களில், கரூர் வேளாண்மை இணை இயக்குனர் சிவசுப்ரமணியன் ஆய்வு மேற்கொண்டார். இதில், குளித்தலை பகுதியில் தற்போது சம்பா பருவத்திற்கான நெல் சாகுபடி செய்யப்பட்டு வரும் நிலையில் அரசு நிர்ணயம் செய்துள்ள நிலையில் ரசாயன உரங்கள் விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருவதை உறுதி செய்தார். மேலும், உரம் வாங்க வரும் விவசாயிகளுக்கு உரம் வாங்கியதற்கான ரசீதை உடனே வழங்க வேண்டும்; இயந்திரத்தில் உள்ளவாறு இருப்பினை சரியான அளவில் வைத்திருக்க வேண்டுமெனவும் உர கடைக்காரர்களுக்கு அறிவுறுத்தினார். உதவி இயக்குனர்கள் கணேசமூர்த்தி, அரவிந்தன் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X