பொது செய்தி

தமிழ்நாடு

பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு அமராவதி அணை தண்ணீர் வரத்து

Added : செப் 12, 2020
Share
Advertisement

கரூர்: அமராவதி அணையில் இருந்து திறக்கப்பட்ட, தண்ணீர் பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு வந்தது.


கடந்த ஆகஸ்ட் மாதம் கேரளா உள்ளிட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில், தென்மேற்கு பருவ மழை காரணமாக, அமராவதி அணையின் நீர்மட்டம் மெல்ல மெல்ல உயர்ந்தது. இதையடுத்து கடந்த மாதம், 6 முதல், 20 வரை அமராவதி அணையில் இருந்து ஆற்றில், 15 நாட்களுக்கு மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில், 90 அடி உயரம் கொண்ட அமராவதி அணையின் நீர்மட்டம், 88 அடியை தாண்டியது. இதையடுத்து கடந்த, 5 முதல் அமராவதி அணையில் இருந்து, இரண்டாம் கட்டமாக தண்ணீர் திறக்கப்பட்டது. அந்த தண்ணீர் நேற்று அதிகாலை, கரூர் நகரையொட்டியுள்ள, பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு வந்தது.

அமராவதி அணை நிலவரம்: நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு, 670 கன அடி தண்ணீர் வந்தது. ஆற்றில், 500 கன அடியும், புதிய பாசன வாய்க்காலில், 400 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது. 90 அடி கொண்ட அணையின் நீர்மட்டம், 88.52 அடியாக இருந்தது.

மாயனூர் கதவணை நிலவரம்: கரூர் அருகே மாயனூர் கதவணைக்கு, நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, 8,962 கன அடி தண்ணீர் வந்தது. குறுவை சாகுபடிக்காக காவிரியாற்றில், 7,742 கன அடி தண்ணீரும், நான்கு பாசன வாய்க்காலில், 1,220 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.

ஆத்துப்பாளையம் அணை நிலவரம்: க.பரமத்தி அருகே உள்ள ஆத்துப்பாளையம் அணைக்கு, நேற்றைய நிலவரப்படி நீர் வரத்து இல்லை. ஆனால், 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 21.97 அடியாக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X