பொது செய்தி

தமிழ்நாடு

வெங்கமேட்டில் சந்தை அமைக்கும் விவகாரம்: கமிஷனர்- வியாபாரிகள் பேச்சுவார்த்தை தோல்வி

Added : செப் 12, 2020
Share
Advertisement

கரூர்: வெங்கமேட்டில், சந்தை அமைப்பது தொடர்பாக, நகராட்சி கமிஷனருடன் வியாபாரிகள் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.


கரூர்-சேலம் பழைய சாலை வெங்கமேடு எம்.ஜி.ஆர்., சிலை அருகே, நாள்தோறும் காலை, 6:00 மணி முதல், 10:00 மணி வரை, 50க்கும் மேற்பட்ட வியாபாரிகள் காய்கறி கடை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த, 4 முதல் போக்குவரத்துக்கு இடை ஞ்சல் ஏற்படுவதாக கூறி, காய்கறி கடைகள் அமைக்க கூடாது என, கரூர் நகராட்சி ஊழியர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, வெங்கமேடு பகுதியில், வியாபாரிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். நேற்று முன்தினம் குறிப்பிட்ட இடத்தில், தடையை மீறி கடைகள் அமைத்தனர். இதனால், நேற்று காலை, கரூர் நகராட்சி கமிஷனர் சுதா தலைமையில், வியாபாரிகள் பங்கேற்ற பேச்சு வார்த்தை நடந்தது. அதில், வெங்கமேடு எம்.ஜி.ஆர்., சிலை சாலையில் கடைகள் அமைப்பதற்கு பதிலாக, வி.வி.ஜி., நகர் சாய்பாபா கோவில் அருகே, வியாபாரிகள் கடைகள் அமைத்து கொள்ளலாம் என, நகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை, வியாபாரிகள் ஏற்க வில்லை. இதனால், பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. பிறகு, வெளியே வந்த வியாபாரிகள் வழக்கம் போல் நாளை (இன்று) வெங்கமேடு எம்.ஜி.ஆர்., சிலை சாலையில், கடைகள் அமைக்க போவதாக தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X