பொது செய்தி

தமிழ்நாடு

இமானுவேல் சேகரன் குரு பூஜை

Added : செப் 12, 2020
Share
Advertisement

கரூர்: தமிழகம் முழுவதும் இமானுவேல் சேகரனின், 63வது குருபூஜை நேற்று நடந்தது. கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே, தேவேந்திர குல வேளாளர்கள் உறவு முறை சார்பில், இமானுவேல் உருவப்படம் வைக்கப்பட்டிருந்தது. அங்கு, அ.தி.மு.க., சார்பில், அமைச்சர் விஜயபாஸ்கர் மாலை அணிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவருக்காக, அ.தி.மு.க., நிர்வாகிகள் காத்திருந்தனர். அப்போது, தி.மு.க.,வை சேர்ந்தவர்களும் இருசக்கர வாகனங்களில் வந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில், அமைச்சர் விஜயபாஸ்கர், அ.தி.மு.க., நிர்வாகிகளுடன் வந்து இமானுவேல் சேகரன் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து விட்டு சென்றார். தொடர்ந்து, மாவட்ட, தி.மு.க., பொறுப்பாளரும், எம்.எல்.ஏ., வுமான செந்தில் பாலாஜி உள்ளிட்ட, தி.மு.க., வினரும், இமானுவேல் சேகரன் படத்துக்கு மாலை அணிவித்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X