பொது செய்தி

தமிழ்நாடு

ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக கவசம் வழங்கல்

Added : செப் 12, 2020
Share
Advertisement

கரூர்: கரூர் அருகே ஆச்சிமங்கலம் ரேஷன் கடையில், ரேஷன் அட்டைதாரர்களுக்கு, முக கவசம் வழங்கும் விழா நேற்று நடந்தது. கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க, பொது வினியோக திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும், நபர் ஒருவருக்கு, தலா இரண்டு முக கவசங்கள் வழங்கப்படும் என, முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி, கரூர் மாவட்டத்தில், நகரப்பகுதிகளில் உள்ள, 163 ரேஷன் கடைகளில், ஒரு லட்சத்து, 14 ஆயிரத்து, 185 ரேஷன் கார்டுகள் மூலம், மூன்று லட்சத்து, 59 ஆயிரத்து, 315 பேருக்கு தலா, இரண்டு முக கவசங்கள் வழங்கப்பட உள்ளன. முதல் கட்டமாக, ஆச்சிமங்கலம் ரேஷன் கடையில் நடந்த விழாவில், போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முக கவசம் வழங்கி துவக்கி வைத்தார். கலெக்டர் அன்பழகன், மாவட்ட பஞ்., துணைத்தலைவர் தானேஷ் முத்துகுமார் உள்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X