பொது மின் மயானம் அமைக்கப்படுமா?

Added : செப் 12, 2020
Share
Advertisement

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சியில், பொது மின்மயானம் அமைத்து தர வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரவக்குறிச்சியை சுற்றிலும் எண்ணற்ற கிராமங்கள் உள்ளன. பள்ளப்பட்டி, அரவக்குறிச்சியில் உள்ள இரண்டு அரசு மருத்துவமனைகளிலும் நவீன பிரேத பரிசோதனை கூடங்கள் உள்ளன. அப்பகுதியில் ஏற்படும் விபத்திலோ அல்லது வேறு ஏதேனும் வகையில் உயிர் இழப்பவர்களை அங்கேயே பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. கிராமப்புறங்களை சேர்ந்த ஒருவர் இறந்தால் முன்பெல்லாம் சொந்த ஊரில் உள்ள மயானங்களிலேயே தகனம் செய்யப்படும். தற்போது கிராமப்புறங்களை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் பிழைப்புக்காக குடிபெயர்ந்து நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர். இதனால், கிராமங்களில் இறப்பு நிகழும்போது, மயானங்களில் தகனம் செய்ய போதிய ஆட்கள் கிடைப்பதில்லை. ஆகவே மின் மயானத்தையே நாட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அந்த சமயத்தில், உடலை கரூருக்கு கொண்டு சென்று மின் மயானத்தில் தகனம் செய்து வருகின்றனர். இதனால் பலமணி நேரம் ஆகிறது. எனவே, அரவக்குறிச்சியை மையமாக கொண்டு மின் மயானம் அமைக்க வேண்டும் என, மக்கள் எதிபார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X