பொது செய்தி

தமிழ்நாடு

டவுன் பஞ்., அலுவலகம்: மா.கம்யூ., முற்றுகை

Added : செப் 12, 2020
Share
Advertisement

மல்லசமுத்திரம்: 'பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாய் இருக்கும் சில்லி கடைகளை அகற்ற வலியுறுத்தி, மல்லசமுத்திரம் பேரூராட்சி அலுவலகத்தை, மா.கம்யூ., கட்சியினர் முற்றுகையிட்டனர். ' மல்லசமுத்திரம், சுப்ராயன் வீதியில், 30க்கும்மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள ஒரு சில்லிகடையில் கடந்தசில தினங்களுக்கு முன்னர், சிலிண்டரில் காஸ் கசிவு ஏற்பட்டு, பலத்த சத்தத்துடன் சிலிண்டர் வெடித்தது. இதனால், அப்பகுதி மக்கள் மற்றும் பெண்கள் அச்சத்திற்கு ஆளாகினர். இப்பகுதியில் உள்ள சில்லி கடைகளால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. குடிமகன்களால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது. இக்கடைகளை அகற்றகோரி, மக்கள் பலமுறை பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் மனுஅளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே, சில்லி கடைகளை அகற்றி, பொது மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும் என வலியுறுத்தி, நேற்று, மா.கம்யூ., கட்சியின் ஒன்றிய செயலாளர் சுரேஷ் தலைமையில், டவுன் பஞ்., அலுவலகத்தை முற்றுகையிட்டு, அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து, செயல் அலுவலர் தனபால் மற்றும் மல்லசமுத்திரம் எஸ்.ஐ., ஆனந்தராஜிடம் மனுஅளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X