பொது செய்தி

தமிழ்நாடு

பறிமுதல் வாகனங்கள் ரூ.27.33 லட்சத்துக்கு ஏலம்

Added : செப் 12, 2020
Share
Advertisement

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் மதுவிலக்கு சோதனையின்போது கைப்பற்றப்பட்ட வாகனங்கள், 27 லட்சத்து, 33 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போயின. நாமக்கல் மாவட்டத்தில் மதுவிலக்கு சட்ட விதிகளின்படி பறிமுதல் செய்யப்பட்ட, 17 நான்கு சக்கர வாகனங்கள், 40 இரு சக்கர வாகனங்கள், மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நேற்று காலை, 11:00 மணியளவில் ஏலம் விடப்பட்டன. மதுவிலக்குப் பிரிவு ஏ.டி.எஸ்.பி., ராமு தலைமை வகித்தார். ஏலம் எடுக்க வந்தோர் நீண்ட வரிசையில் காத்திருந்து, 5,000 ரூபாய் முன்பணம் செலுத்தினர். இதில், இரு சக்கர வாகனங்கள், 40 எண்ணிக்கையிலும், நான்கு சக்கர வாகனங்கள், 10 எண்ணிக்கையிலும் ஏலம் போயின. மொத்தமாக, அரசுக்கு, 27 லட்சத்து, 33 ஆயிரத்து, 620 ரூபாய் கிடைத்தது. ஏலம் எடுத்த வாகனங்களுக்கு போலீசார் சார்பில் உரிய அங்கீகாரம் வழங்கப்பட்டு எடுத்துச் செல்ல அனுமதியளிக்கப்பட்டது. ஏலம் எடுக்க வந்தவர்கள் அனைவரையும் கொரோனா தடுப்பு கிருமி நாசினி தெளித்தும், முக கவசம் அணிந்தும் சமூக இடைவெளியில் வந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X