பொது செய்தி

தமிழ்நாடு

கோரிக்கைகளை வலியுறுத்தி இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்

Added : செப் 12, 2020
Share
Advertisement

எலச்சிபாளையம்: எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில கட்டுப்பாட்டுகுழு உறுப்பினர் மணிவேல் தலைமை வகித்தார். எலச்சிபாளையம் ஒன்றிய பகுதிகளில் குடிநீர் இணைப்பிற்காக, 1,000, 2,000 ரூபாய் கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும். கொரோனா காலத்தில் அனைத்து பகுதிகளிலும் குடிநீர் வினியோகத்தை முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களிடம் கட்டாய வரி வசூலை தடுக்க வேண்டும் எனபன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில், மல்லசமுத்திரம், எலச்சி பாளையம் ஒன்றிய செயலாளர் அன்புமணி, மாவட்ட குழு உறுப்பினர்கள் செங்கோட்டையன், மாரிமுத்து உட்பட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X