பொது செய்தி

தமிழ்நாடு

'நடப்பு ஆண்டில் நாமக்கல்லில் கோழியின ஆராய்ச்சி மையம்'

Added : செப் 12, 2020
Share
Advertisement

நாமக்கல்: ''நடப்பு ஆண்டில், நாமக்கல்லில் கோழியின ஆராய்ச்சி மையம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, தமிழக கால்நடை மற்றும் பராமரிப்புத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் கூறினார்.


இதுகுறித்து, நாமக்கல்லில் அவர் கூறியதாவது: சேலம் மாவட்டம், தலைவாசலில், கால்நடை பூங்கா உருவாக்கப்பட்டு வருகிறது. கோழிப் பண்ணைகள் நிறைந்த மாவட்டமாக நாமக்கல் உள்ளது. ஏற்கனவே, இங்கு, மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைந்துள்ளது. கோழியின ஆராய்ச்சி மையம், நாமக்கல்லில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. இது தொடர்பாக, முதல்வருடன் பேசி, நடப்பு ஆண்டிலேயே நிறைவேற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். நாமக்கல், பல்லடம் கோழி பண்ணையாளர்கள் பயன்பெறும் வகையில், பல்வேறு உதவிகளை, முதல்வர் செய்து கொடுத்துள்ளார். பண்ணைகளில் முட்டைகள் தேங்காத வகையில், உடனுக்குடன் விற்பனைக்காக அனுப்புவதற்கான நடவடிக்கையை முதல்வர் மேற்கொண்டதற்கு, பண்ணையாளர்களே நேரடியாக பாராட்டியுள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X