சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கலெக்டரை சந்திக்க அனுமதி மறுப்பு: பஞ்., தலைவி தீக்குளிக்க முயற்சி

Added : செப் 12, 2020
Share
Advertisement

தர்மபுரி: அடிப்படை வசதிகளுக்கு நிதி ஒதுக்கக்கோரி, மனு அளிக்க வந்த, பஞ்.,தலைவிக்கு கலெக்டரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதால், மனமுடைந்த அவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் யூனியன், அடிலம் பஞ்., தலைவர் தீபா, 26. (தி.மு.க.,) இவர் மற்றும் துணைத்தலைவர் ராணி, எட்டு வார்டு உறுப்பினர்கள் ஆகியோர், அடிப்படை வசதிகளை செய்து தர நிதி ஒதுக்கவேண்டும். கிராமங்களில் உள்ள பகுதிகளை தூய்மையாக வைத்திருக்க கிருமி நாசினி, பிளீச்சிங் பவுடர் வாங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில், நிதி ஒதுக்கப்படவில்லை. எனவே அடிப்படை தேவை, கொரோனா நிதி ஒதுக்கி தர வேண்டும் என்ற மனுவுடன் நேற்று மதியம், 1:00 மணிக்கு, தர்மபுரி கலெக்டர் அலுவலகம் வந்தனர். அங்கிருந்த போலீசார், கூட்டமாக செல்ல அனுமதி மறுத்தனர். இதனால் அவர்கள், தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கலெக்டரை சந்திக்க, 1:30 மணிக்கு முதல் தளத்திற்கு சென்றனர். அங்கிருந்த அலுவலர்கள், கொரோனா காலம் என்பதால் கலெக்டர் மலர்விழியை சந்திக்க அனுமதி கிடையாது. மனுவை எங்களிடம் கொடுங்கள் என்று கூறியுள்ளனர். அதற்கு அவர்கள், கலெக்டரை நேரில் சந்தித்து மனு அளிப்போம் என்று கூறிவிட்டு தரை தளத்திற்கு வந்தனர். அப்போது மனமுடைந்த பஞ்.,தலைவி தீபா, தலையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த போலீசார் தடுத்தனர். ஆனாலும், தலைவி, உறுப்பினர்கள் கலெக்டர் கார் அருகே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், தர்மபுரி டவுன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, 2:30 மணிக்கு அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X