பொது செய்தி

இந்தியா

மாணவர்கள் தற்கொலை சோகம் ஏன்?

Updated : செப் 12, 2020 | Added : செப் 12, 2020 | கருத்துகள் (22)
Share
Advertisement
'நீட்' நுழைவுத் தேர்வு வருவதற்கு காரணமாக இருந்த, தி.மு.க.,வும், அதை செயல்படுத்திய, இ.பி.எஸ்., அரசும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுவதுபோல், நாடகம் ஆடுகின்றனர். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற, தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க மறுப்பதால் தான், மாணவர்கள் தற்கொலை சோகம் தொடர்கிறது - அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன்.'நீட் தேர்வை, தமிழக அரசியல் தலைவர்கள் ஒட்டுமொத்தமாக
தினகரன்,ஷியாம் கிருஷ்ணசாமி,சுரேஷ்ராஜன்,பாண்டித்துரை,

'நீட்' நுழைவுத் தேர்வு வருவதற்கு காரணமாக இருந்த, தி.மு.க.,வும், அதை செயல்படுத்திய, இ.பி.எஸ்., அரசும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுவதுபோல், நாடகம் ஆடுகின்றனர். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற, தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க மறுப்பதால் தான், மாணவர்கள் தற்கொலை சோகம் தொடர்கிறது - அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன்.


'நீட் தேர்வை, தமிழக அரசியல் தலைவர்கள் ஒட்டுமொத்தமாக எதிர்த்தால், 'நம்மால் முடியாது போல...' என தவறாக நினைக்கும் நம் மாணவச் செல்வங்கள், தவறான முடிவு எடுக்கத் தான் செய்வர். மாணவர்களின் உயிர், அரசியல் தலைவர்களின் பேச்சில் தான் உள்ளது...' என, சொல்ல வைக்கும் வகையில், அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை.ஹிந்தி வேண்டாம்; அது குலக்கல்வித் திட்டத்தை ஊக்குவிக்கும் என்பது, மக்கள் கோஷம் அல்ல. தி.மு.க.,வின் அரசியல் கோஷம் - புதிய தமிழகம் இளைஞரணி தலைவர் ஷியாம் கிருஷ்ணசாமி.


'அதை மக்கள் அறிந்ததால் தான், நீண்ட காலமாக, தி.மு.க.,வை எதிர்க்கட்சியாகவே வைத்திருந்தனர்... என, சொல்லத் தோன்றும் வகையில், புதிய தமிழகம் இளைஞரணி தலைவர் ஷியாம் கிருஷ்ணசாமி அறிக்கை.நாகர்கோவிலில், பாதாள சாக்கடை திட்டம், நிர்ணயிக்கப்பட்ட கால அளவை கடந்து நீண்டு கொண்டிருக்கிறது. இந்த பணி, சரியாக திட்டமிடப்படாமல் செய்யப்படுகிறது. சாலைகளில் பள்ளங்களால் விபத்து ஏற்படுகிறது. கொரோனாவில் மக்கள் வேதனை அனுபவித்து வரும் நிலையில், நாகர்கோவில் மக்கள் மேலும் ஒரு வலியை தாங்க வேண்டிய நிலை உள்ளது - தி.மு.க., - எம்.எல்.ஏ., சுரேஷ்ராஜன்.


latest tamil news

'போர்க்குணம் நிரம்பிய, குமரி மாவட்ட தலைநகர் நாகர்கோவில் நிலைமை மாற வேண்டும்...' என, சொல்லத் தோன்றும் வகையில், நாகர்கோவில் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., சுரேஷ்ராஜன் பேச்சு.வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தமிழ் கற்று கொள்ளக்கூடாது என, வட மாநிலங்களில் யாரும் போராடுவதில்லை. ஆனால், தமிழகத்தில் தான், ஹிந்தி கற்று கொள்ள எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். தொழில் வளர்ச்சிக்கு ஹிந்தி அவசியம் - பா.ஜ., அமைப்பு சாரா அணி மாநில தலைவர் பாண்டித்துரை.


'தமிழ், ஹிந்தி மட்டுமல்ல, மலையாளம், தெலுங்கு, துளு என, பல மொழிகளை அனைவரும் கற்க வேண்டும்; அப்போது தான், பொருளாதாரம் மட்டுமின்றி அறிவும் வளர்ச்சி பெறும்...' என, சொல்லத் தோன்றும் வகையில், பா.ஜ., அமைப்பு சாரா அணி மாநில தலைவர் பாண்டித்துரை பேட்டி.தமிழகத்தில் பெய்து வரும் பருவ மழையால், பால் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால், தமிழக அரசு, அங்கன்வாடி மையங்கள், பள்ளி குழந்தைகளின் சத்துணவு திட்டத்தில் பால் வழங்க வேண்டும். தற்போது ஆவினில் தேங்கிய பவுடரை, கொரோனா காலத்தில் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, ரேஷன் கடைகளில் பால் பவுடராக வழங்க வேண்டும் - மாநில பால் உற்பத்தியாளர் நலச்சங்க தலைவர் செங்கோட்டுவேல்.


'பால் உற்பத்தியாளர்கள் வயிற்றில் பால் வார்க்கும் இந்த நல்ல திட்டத்தை, மாநில அரசு தாராளமாக செயல்படுத்தலாம்...' என, ஆதரவு தெரிவிக்கத் தோன்றும் வகையில், மாநில பால் உற்பத்தியாளர் நலச்சங்க தலைவர் செங்கோட்டுவேல் அறிக்கை.


Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shankar Nadar - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
13-செப்-202002:31:43 IST Report Abuse
Shankar Nadar தற்கொலை மனப்பான்மை ஒரு மன நோய். இவர்கள் நீட் போன்ற தகுதி தேர்வு விண்ணப்பிக்கும் முன்பு மனநல மருத்துவர்களின் கவுன்சிலிங்குக்கு உட்பட வேண்டும். பெற்றோர்கள் வற்புதலில் தான் இவர்களுக்கு மன அழுத்தம் உண்டாகுகிறது. மருத்துவர் ஆவதற்கு மனதிடம் வேண்டும். தன் உயிரை மாய்த்து கொள்ள நினைப்பவர்கள் எப்படி மருத்துவராகி மற்றஉயிர்களை காப்பாற்ற முடியும். உயிர் இழந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். இதைவைத்து ஆதாயம் தேடும் ஊடகங்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு கண்டனம்.. இந்த மாதிரி தற்கொலைகள். எல்லாவித தேர்வுகள் தோல்விகளிலும் சம்பவிக்கின்றந. அதற்காக அந்த தேர்வுகளை ரத்து செய்ய முடியாது. எத்தனையோ கோடி கணக்கான மாணவர்கள் ஆவலுடன் தேர்வு எழுத இருக்கும் நிலையில் தேர்வை ரத்து செய்ய கோருவது நியாயமல்ல. இறந்தவர்களை வைத்து அரசியல் நடத்தும் அரசியல்வாதிகளுக்கு எனது கண்டனம்.
Rate this:
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
12-செப்-202020:33:38 IST Report Abuse
Krishnamurthy Venkatesan இறந்த மாணவனின் குடும்பத்திற்கு செலவிடப்படும் தொகையினை அரசியல் கட்சிகள் தமது கட்சியின் சார்பாக கோச்சிங் சென்டர் நடத்தி மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்தலாம். தமது கட்சியில் உள்ள படித்த இளைஞர்களைக் கொண்டு (?) மாணவர்களுக்கு இலவசமாக டியூஷன் எடுக்கலாம். போட்டி தேர்வில் வெற்றி பெரும் மாணவர்களுக்கு பரிசும் பாராட்டுக்களும் தரலாம். சிவில் சர்வீஸ் போட்டி தேர்விற்கு மனித நேய அறக்கட்டளையின் மூலம் பல ஆயிரம் இளைஞர்களை தயார் படுத்தி வெற்றி பெற செய்த முன்னாள் மேயர் அவர்கள் மூலம் கோச்சிங் கொடுக்கலாம். அரசியல் தலைவர்கள் இன்னும் தீர ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். எல்லோரும் நுனிப்புல் மேய்கிறார்கள். தோற்று விடுவோம் என எண்ணி போட்டி தேர்விற்கு முன்னரே உயிர் விடும் மாணவர்கள், வெற்றி தோல்வியை பற்றி கவலை படாமல் தம் உயிரையும் பொருட்படுத்தாது நாட்டை பாதுகாக்க உயிர் நீத்த (கல்வான் தாக்குதல்) வீரர்களை சற்று நினைத்து பார்க்க வேண்டும்.
Rate this:
Cancel
Peria Samy - chennai,இந்தியா
12-செப்-202020:28:17 IST Report Abuse
Peria Samy நீட் தேர்வுக்குப் பயந்து எந்த மாணவ மாணவியரும் பிற மாநிலங்களில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் இல்லை. தமிழ் நாட்டில் இது நடக்கிறது என்றால் தமிழ் நாட்டுக் கல்வித்தரம் பலவீனமாக உள்ளதா இல்லை தமிழக மாணவர்களின் பலவீனமான மனநிலை காரணமா? மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கை நடைமுறைக்கு வந்தால் இதற்கு ஒரு தீர்வு கிடைக்குமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X