பொது செய்தி

தமிழ்நாடு

வெள்ளைத்தாய்க்கு 2வது கறவை மாடு

Added : செப் 12, 2020
Share
Advertisement
 வெள்ளைத்தாய்க்கு 2வது கறவை மாடு

திண்டுக்கல்:திண்டுக்கல் கரூர் ரோடு சத்திரப்பட்டியில், வெளளைத்தாய் என்பவரின் பசு மாடுவிபத்தில் அடிபட்டு இறந்தது. தனது ஒரே வருமானத்தை இழந்து வெள்ளைத்தாய் கதறி அழுதது தினமலர் நாளிதழில் வெளியானது. இதை பார்த்ததும் கால்நடை துறை மூலமாக அமைச்சர் சீனிவாசன் கறவைமாடு ஒன்றை வெள்ளைத்தாயிடம் வழங்கினார். மதுரை விஸ்வாஸ் புரமோட்டர்ஸ் உரிமையாளர் ஸ்ரீகுமார், வெள்ளத்தாயியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு பசுமாடு வாங்க ரூ 50,000 வழங்கினார். வெள்ளைத்தாய், அவரது குடும்பத்தினர் மற்றும் அப்பகுதியினர் தினமலர் நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X