பீஹாரில் கூட்டணி குறித்து மகனின் முடிவை ஏற்பேன்: ராம்விலாஸ் பஸ்வான்

Updated : செப் 12, 2020 | Added : செப் 12, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
BiharElection, LJP_Leader, RamVilasPaswan, Agrees, EveryDecision, Chirag, பீஹார், பீகார், தேர்தல், லோக்ஜனசக்தி, ராம்விலாஸ் பஸ்வான், கூட்டணி,

பாட்னா: பீஹாரில் கூட்டணி குறித்து எனது மகன் எடுக்கும் முடிவை ஏற்றுக்கொள்வேன் என மத்திய அமைச்சரும், லோக்ஜனசக்தி கட்சியின் நிறுவனருமான ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

பீஹார் சட்டசபையின் பதவிக்காலம் வரும் நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. இதற்கு முன்னதாகவே தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதால், அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. பா.ஜ., கூட்டணியில் இடம் பெற்றுள்ள லோக்ஜனசக்தி கட்சி தலைவர் சிராக் பஸ்வானுக்கும், முதல்-அமைச்சர் நிதீஷ்குமாருக்கும் உரசல் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த லோக்ஜனசக்தி கட்சியின் உயர்மட்ட கூட்டத்தில், கூட்டணி குறித்து முடிவு எடுக்கும் அதிகாரத்தை சிராக் வசம் ஒப்படைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


latest tamil newsஇது குறித்து இந்நிலையில் லோக்ஜனசக்தி நிறுவனரும், மத்திய அமைச்சரும், சிராக்கின் தந்தையுமான ராம்விலாஸ் பஸ்வான் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: எனது மகன் சிராக்கின் இளம் சிந்தனைகள், பீஹாரையும், கட்சியையும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. பீஹார் மாநிலத்தில் கூட்டணி குறித்து என் மகன் சிராக் பஸ்வான் என்ன முடிவு எடுத்தாலும் ஏற்றுக்கொள்வேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். ராம்விலாஸ் பஸ்வான், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
13-செப்-202017:16:32 IST Report Abuse
madhavan rajan மகன் சொல்வதை கேட்காவிட்டால் அவன் கட்சியை கடத்திக் கொண்டு போய்விடுவான். இவர் அரசியல் அனாதையாகிவிடுவார்.
Rate this:
Cancel
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
12-செப்-202020:56:21 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN கூட்டணி கொள்ளையர்களை மக்கள் ஆதரிக்கக்கூடவே கூடாதுங்க. கண்டவனெல்லாம் கட்சி வைத்துக்கொண்டு தேர்தல்போது காசு பரிக்க உள்ள நிலையை மாற்றனும்னா கூட்டு சேர்ந்து தேர்தலில் ஓட்டு சேகரிப்பதை தடுத்திடனும். கட்சி பலத்தை தனித்தனி யாக நின்று போட்டியிடல் வேண்டும் உடனே மைய அரசு கவனம் கொண்டு விதிமுறையை கொண்டுவந்து நாட்டை காப்பாற்ற முயற்சிக்கவேண்டும். இலங்கை அதிபர் உடனே சட்ட திருத்தம் கொண்டுவந்துள்ளார் . அதுதான் ஆட்சி அப்போதான் நல்ல சட்டங்கள் மூலம் மக்களுக்கு நல்லதை செயல்படுத்த முடியும் .இல்லையேல் போக்கிரிகள் எதையும் எதிர்த்தே கெடுப்பார்கள் . வாக்கை திருட்டு பணத்தை கொண்டு வாங்கி வீராப்பு பேசி லஞ்ச லாவண்யத்தை தலைவிரித்தாட செய்வார்கள் அதில் இவர்கள் சொகுசாக குளிர் காய்வார்கள் அவர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள் .
Rate this:
Cancel
siriyaar - avinashi,இந்தியா
12-செப்-202019:35:10 IST Report Abuse
siriyaar கட்சியா கம்பெனியா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X