அலெக்சி நவல்னியிடம் நேரடியாக விசாரணை நடத்த ரஷ்யா முடிவு

Updated : செப் 12, 2020 | Added : செப் 12, 2020
Share
Advertisement
RussianPolice, SeekToQuestion, AlexeiNavalny, Germany, ரஷ்யா, போலீஸ், அலெக்சி நவல்னி, விசாரணை

மாஸ்கோ: விஷம் கொடுக்கப்பட்டதால் ஆபத்தான நிலைக்கு சென்று திரும்பியுள்ள ரஷ்ய எதிர்கட்சி தலைவர் அலெக்சி நவல்னியிடம் ஜெர்மன் சென்று விசாரணை நடத்த ரஷ்ய போலீஸ் முடிவு செய்துள்ளது.

ரஷ்ய அதிபர் புடின் 2000-ம் ஆண்டு முதல் அதிபராகவும், பிரதமராகவும் மாறி மாறி ஆட்சி நடத்தி வருகிறார். சமீபத்தில் வாழ்நாள் அதிபராவதற்கான சட்ட திருத்தம் ஒன்றையும் நிறைவேற்றி உள்ளார். அவரது ஆட்சியில் ஊழல் நடக்காத துறையே இல்லை என அதிரடியாக பேசி, பகீர் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வந்தார் எதிர்கட்சித் தலைவர் அலெக்சி நவல்னி.


latest tamil news



கடந்த மாதம் டாம்ஸ்க் விமான நிலையத்தில் தேநீர் ஒன்றை அருந்தி விட்டு விமானம் ஏறியவர் மயங்கி விழுந்தார். உடனே விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டு உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பாதுகாப்பு கருதி அவரது குடும்பத்தினர் ஜெர்மனுக்கு தனி விமானத்தில் கொண்டு சென்றனர். ஐரோப்பாவில் மிகப்பெரிய மருத்துவமனைகளில் ஒன்றான பெர்லின் சாரிட்டி மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

அவரது ரத்த மாதிரிகளை ராணுவ ஆய்வகத்தில் பரிசோதித்த ஜெர்மன் அரசு, அவரது உடலில் சோவியத் ராணுவம் தயாரித்த நோவிசோக் எனும் கொடிய நச்சுப்பொருள் இருப்பதை கண்டறிந்ததாக கூறியது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ விஷம் கொடுக்கும் உத்தரவு ரஷ்ய மூத்த அதிகாரிகளிடமிருந்து வந்தது என கூறியுள்ளார்.


latest tamil news



இக்குற்றச்சாட்டுகள் அபத்தமானவை என ரஷ்ய அரசு மறுத்துள்ளது. அவர் உடலில் விஷமிருந்ததற்கான தடயமே இல்லை என ரஷ்யா பிடிவாதம் பிடிக்கிறது. இதன் காரணமாக இன்னும் இவ்வழக்கு குற்றவழக்காக பதிவு செய்யப்படவில்லை. போக்குவரத்து காவலர்கள் தான் அலெசி சென்று வந்த இடங்களில் விசாரித்து வருகின்றனர். தற்போது அலெக்சி கோமாவிலிருந்து மீண்டுள்ளார். கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் என பெர்லின் மருத்துவமனை தெரிவித்தது. இதனால் அவரிடம் நேரடியாக விசாரணை நடத்த முற்படுவதாக ரஷ்ய போலீசார் அறிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X