பொது செய்தி

இந்தியா

ஜேஇஇ தேர்வில் 100 சதவீத மதிப்பெண் பெற்ற 24 மாணவர்கள்

Updated : செப் 12, 2020 | Added : செப் 12, 2020 | கருத்துகள் (30)
Share
Advertisement
JEE,  Result,  candidates, percentile,turbulent exam, ஜேஇஇ, தேர்வு, மதிப்பெண், மாணவர்கள்,

புதுடில்லி : நேற்று இரவு வெளியான ஜேஇஇ முதல் தாள் தேர்வு முடிவுகளில், 24 மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

ஜேஇஇ தேர்வு முதல்கட்டமாக ஜனவரி மாதம் நடந்தது. இதன் பின்னர் 2வது கட்டமாக செப்., 1 முதல் 6 ம் தேதி வரை நடந்தது. இந்த தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால், அந்த மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

முதல்தாள் தேர்வின் முடிவுகள் அடிப்படையில் என்ஐடி மற்றும் ஐஐடிக்களில் பிடெக் மற்றும் பிஇ படிப்புகளில் மாணவர்கள் சேர முடியும். இரண்டாம் தாள் தேர்வு முடிவு அடிப்படையில் பிஆர்க் படிப்புகளில் சேரலாம். இரண்டாம் தாள் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. முதல்தாள் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை நேற்று இரவு வெளியிட்டது.

இரண்டு தாள் தேர்வுகள் முடிவுகள் அடிப்படையில் ஜேஇஇ அட்வான்ஸ்ட் தேர்வை எழுத முடியும். இந்த தேர்வு வரும் 27 ம் தேதி நடைபெற உள்ளது. 2.45 லட்சம் பேர் எழுத உள்ளனர். இதன் அடிப்படையில் இந்தியா முழுவதும் உள்ள ஐஐடி மற்றும் என்ஐடி என 23 கல்வி நிறுவனங்களில் சேர முடியும்.


latest tamil news




நேற்று வெளியான முதல்தாள் தேர்வு முடிவுகளில் 24 மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அதில் 8 பேர் தெலுங்கானாவை சேர்ந்தவர்கள். 5 பேர் டில்லியையும், 4 பேர் ராஜஸ்தானையும், 3 பேர் ஆந்திராவையும், 2 பேர் ஹரியானாவையும், மஹாராஷ்டிரா மற்றும் குஜராத்தை சேர்ந்த தலா ஒருவர் 100 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
13-செப்-202017:01:36 IST Report Abuse
Yaro Oruvan "8 பேர் தெலுங்கானாவை சேர்ந்தவர்கள். 5 பேர் டில்லியையும், 4 பேர் ராஜஸ்தானையும், 3 பேர் ஆந்திராவையும், 2 பேர் ஹரியானாவையும், மஹாராஷ்டிரா மற்றும் குஜராத்தை சேர்ந்த தலா ஒருவர் 100 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்." சந்தோஷமா சொடலை க்ரூப்??தமிழ்நாட்டுல இருந்து யாரும் லிஸ்ட்ல வரல.. இதுதானே உனக்கு வேண்டும்?? பெற்றோர்களே அந்த க்ரூப் இருக்குற வரைக்கும் உங்கள் பிள்ளைகளின் கல்வி கேள்விக்குறியே...
Rate this:
eswaran - tiruppur,இந்தியா
13-செப்-202021:36:50 IST Report Abuse
eswaranஅதனால ஹிந்தில பாடத்தை நடத்தச்சொல்லலாம்...
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
13-செப்-202003:59:13 IST Report Abuse
meenakshisundaram யம்மா கொஞ்சம் தமிழ் நாட்டு பொண்ணுங்களையம் மாணவர்களையும் பாருங்கோ - நீட் ன்னு சொன்னாலே ஓடுறாங்கோ இவிங்க எப்படி படிச்சு 'டாக்டரு'ஆவ முடியும் ,தானே செத்துக்கிட்டு இருக்கான் ?
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
13-செப்-202002:49:40 IST Report Abuse
Rajagopal தமிழ் நாட்டில் ஜெ ஈ ஈ பரீட்சையை ரத்து செய்ய வேண்டும் இன்றி சுடலையார் தலைமையில் ஒரு கூட்டணி உண்ணா விரதம் இருக்க முடிவு செய்துள்ளது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X