பயங்கரவாதத்துக்கு எதிராக உடனடி நடவடிக்கை: பாக்.,கிற்கு இந்தியா-அமெரிக்கா வலியுறுத்தல்

Updated : செப் 12, 2020 | Added : செப் 12, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
India, US, JointStatement, Pakistan, Immediate, Irreversible,Action, Terrorists

வாஷிங்டன்: பாகிஸ்தானை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக அந்நாடு கடுமையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று இந்தியாவும் அமெரிக்காவும் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய-அமெரிக்க செயலாற்றுக் குழுவின் 17வது கூட்டம் வீடியோ கான்பரன்சிங் மூலமாக கடந்த 9 மற்றும் 10ம் தேதிகளில் நடைபெற்றது. அதையடுத்து இரு நாடுகளும் இணைந்து கூட்டாக அறிக்கை வெளியிட்டது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: பயங்கரவாதச் செயல்கள், எல்லை தாண்டிய பயங்கரவாதம் ஆகியவற்றை இந்தியாவும் அமெரிக்காவும் கூட்டாக எதிர்க்கின்றன. தங்கள் நாட்டில் உள்ள எந்தவொரு பகுதியும் பயங்கரவாதிகளுக்கும், பயங்கரவாத அமைப்புகளுக்கும் அடைக்கலம் அளிக்கவில்லை என்பதை பாகிஸ்தான் உறுதிப்படுத்த வேண்டும்.


latest tamil news


அந்நாட்டில் உள்ள பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசு உடனடியாக எடுக்க வேண்டும். மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல், பதான்கோட் விமானப்படைத் தளத்தில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல் உள்ளிட்டவற்றுடன் தொடா்புடைய பயங்கரவாதிகளை பாகிஸ்தான் அரசு சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். பயங்கரவாதத்துக்கு எதிராக இந்திய அரசும் அந்நாட்டு மக்களும் கொண்டுள்ள நிலைப்பாட்டுக்கு அமெரிக்கா தொடா்ந்து ஆதரவு தெரிவிக்கிறது. இவ்வாறு அந்த கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mathimandhiri - chennai,இந்தியா
12-செப்-202018:31:11 IST Report Abuse
mathimandhiri அமெரிக்காவின் இது போன்ற எச்சரிக்கை வெளி வரும் போதெல்லாம் இம்ரான் நமுட்டுச் சிரிப்பு சிரித்துக் கொள்வான் போல.. "தீவிர வாதத்தை ஒடுக்க" அமெரிக்கா செய்து வரும் பொருளுதவி அப்படியெல்லாம் நின்று விடாது என்ற திடமான நினைப்பு போலும்.
Rate this:
Cancel
Indian Ravichandran - Chennai,இந்தியா
12-செப்-202017:45:06 IST Report Abuse
Indian  Ravichandran மூர்கன்ஸ் ஒருபோதும் திருந்த வாய்ப்பில்லை நீங்கள் என்ன கத்தினாலும் அவன் கேட்கமாட்டான் இன்னும் ஒரு புது தீவீரவாதி கம்பனி வேணுமுன்னா ஓப்பன் பண்ணுவான். யாரையாவது கொன்னுட்டு வந்த சுகனத்தில் இடம் கிடைக்கும்னு நம்புற மூர்க்க கூட்டம் அது, திருந்தது
Rate this:
Cancel
mathimandhiri - chennai,இந்தியா
12-செப்-202017:27:19 IST Report Abuse
mathimandhiri அமெரிக்காவின் இந்தக் கண்டிப்பு /கண்டன அறிக்கை ஆயிரம் முறை வெளி வந்து விட்டது. அவர்கள் வாய்ச் சவடாலோடு தான் நிற்பார்கள். வெறும் மிரட்டலை எத்தனை ஆண்டுகளாகப் பார்த்து வருகிறோம் ? செயலில் பூச்சியம் தான். தடாலடியாக பொருளாதார உதவி நிறுத்தம் போன்ற ஒரு கான்க்ரீட் நடவடிக்கை அவர்களிடமிருந்து கண்டிப்பாக இருக்கவே இருக்காது. பாகிஸ்தானின் இன்று வரை அடங்காத திமிருக்கு சீனா மட்டும் காரணம் இல்லை என்பதை கொஞ்சம் ஆற அமர யோசித்தால் புரியும். சீனாவின் ஆதரவு வெளிப்படையானது. அமெரிக்கா அவர்களை அடித்தால் வலிக்காது என்பது பாக். க்கும் நன்றாகத் தெரியும்.நம் கையே நமக்கு உதவி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X