பொது செய்தி

தமிழ்நாடு

நீட்-ஐ தடைசெய்: டுவிட்டரில் ட்ரெண்டிங்

Updated : செப் 13, 2020 | Added : செப் 12, 2020 | கருத்துகள் (106)
Share
Advertisement
BanNEET, NEET, TNAgainstNEET,

சென்னை : மருத்துவ படிப்புகளுக்கான 'நீட்' நுழைவு தேர்வு நாளை(செப்., 13) நடக்கிறது. ஏற்கனவே இந்த தேர்வுக்கு பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் கொரோனா காலத்தில் இதை ரத்து செய்ய வேண்டும் என கூறியும், மதுரையில் ஒரு மாணவி தற்கொலை செய்த விவகாரத்தையும் சுட்டிக்காட்டி #BanNEET என்ற ஹேஷ்டாக் சமூகவலைதளங்களில் டிரெண்ட்டாகி வருகிறது.

பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர, 'நீட்' நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு, மே, 3ல் நடப்பதாக இருந்தது. ஆனால், கொரோனா தொற்று பிரச்னை காரணமாக, தேர்வு தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், நாளை(செப்., 13) இந்த தேர்வு நடத்தப்பட உள்ளது. நாடு முழுதும், 16 லட்சம் பேர் விண்ணப்பம் பதிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே கொரோனா நோய் தீவிரம் இன்னும் முழுமையாக தீராத நிலையில் பள்ளி, கல்லூரிகளே திறக்கவே மத்திய, மாநில அரசுகள் தயங்குகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நீட் தேர்வு அவசியம் தானா என பல மாநிலங்களில் இந்த தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி வருகின்றனர். இக்காலத்தில் போதிய பயிற்சி கூட இல்லாமல் மாணவர்கள் ஒரு வித மன அழுத்தத்தில் உள்ளனர். ஆகையால் தேர்வை ரத்து செய்யுங்கள் என்ற கோரிக்கை வலுத்து வந்தது.


latest tamil news
இந்நிலையில் மதுரையில் நீட் தேர்வு எழுத இருந்த ஒரு மாணவி தற்கொலை செய்துள்ளார். இதையும், ஏற்கனவே நடந்த தற்கொலை சம்பவங்களையும் சுட்டிக்காட்டி #BanNEET, #NEET, #TNAgainstNEET என்ற ஹேஷ்டாக் சமூகவலைதளங்களில் டிரண்ட்டாகி வருகிறது. சுமார் 50 ஆயிரம் இதை ரீ-டுவீட் செய்துள்ளனர்.


பயம் வேண்டாம்


இதற்கிடையே மூத்த கல்வியாளர் ஒருவர் நீட் தேர்வு குறித்து கூறுகையில், ''தேர்வு மையத்துக்கு வரும் அனைத்து மாணவர்களையும் உடல் வெப்பநிலையை பரிசோதித்து தான் அனுமதிக்கப்படுவர். அவர்களின் உடல் வெப்பநிலை சராசரியை விட அதிகம் இருந்தால் அவர்கள் தனி அறையில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். கிருமி நாசினி கொண்டு தேர்வு எழுத வரும் அனைத்து மாணவர்களையும் கைகளை சுத்தம் செய்த பிறகே, தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

முககவசம் கட்டாயம் அணிந்திருப்பார்கள். மேலும் சமூக இடைவெளி உடன் தான் தேர்வு நடக்கும். முடிந்தவரை கூட்டம் சேராமல் மாணவர்களை தேர்வு மையத்திற்கு உள்ளேயும், தேர்வு முடிந்த பின்பு வெளியேயும் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தான் தேர்வு நடத்தப்பட இருக்கிறது. யாரும் பயம் கொள்ள தேவையில்லை'' என்றார்.


தற்கொலை தீர்வல்ல


மனோதத்துவ நிபுணர் ஒருவர் கூறும்போது, ''மாணவர்கள் சவாலை சந்திக்க பழக வேண்டும். தேர்வுக்கு பயந்து கொண்டு தற்கொலை செய்வது பெரிய தவறு. பிரச்னையை எதிர்கொள்வதே வாழ்க்கை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தற்கொலை ஒருபோதும் தீர்வல்ல. நீட் தேர்வில் வெற்றி பெறாவிட்டால் என்ன, எத்தனையே போட்டி தேர்வுகள் உள்ளன. பள்ளிக்கல்வி, கல்லூரி படிப்புகளை முடித்துவிட்டு அதுபோன்ற போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்று பல பேர் சாதனை செய்துள்ளனர். மாணவர்கள் அந்த வழியில் செல்ல வேண்டும் என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (106)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s t rajan - chennai,இந்தியா
13-செப்-202019:38:24 IST Report Abuse
s t rajan காதலில் தோல்வி - தற்கொலை, கடன் சுமை - தற்கொலை, படிப்பு வரவில்லை - தற்கொலை, சினிமா சான்ஸ் இல்லை ' தற்கொலை, திமுகவில் ஒரு குடும்பத்தையும் அதன் அடிமைகளையும் தவிற பதவி கிடையாது - தற்கொலை.... என்றால், காதலை, கடன் கொடுப்பதை, சினிமாவை, பரீட்சையை, திமுகவை தடை செய் என்றால் என்ன நியாயம் ?
Rate this:
Cancel
Saai sundaramurthy. A.V.K - chennai,இந்தியா
13-செப்-202016:55:07 IST Report Abuse
Saai sundaramurthy. A.V.K நீட் மட்டும் தான் வாழ்க்கையல்ல என்று மனதை மாற்றி கொண்டு வேறு ஒரு துறையில் சென்று சாதிக்க வேண்டும். இந்த மாதிரி தைரியம் இல்லாதவர்கள் தான் தற்கொலை செய்து கொள்கிறார்கள். வெட்க கேடானது. மேலும், "இன்று நீட் தேர்வு, நேற்று தற்கொலை" என்றால் நிச்சயம் இது திக - திமுக வின் அரசியல் நாடகம் என்பது உச்ச நீதிமன்றத்திற்கு தெரியும். ஒவ்வொரு வருடமும் யாரையாவது பலிகடாவாக்கி அதில் பிண அரசியல் செய்வது இந்த கட்சிகளின் வாடிக்கையாகி விட்டது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத தற்கொலைகள் தமிழ்நாட்டில் மட்டும் நடப்பது ஏன் என்பதும் உச்ச நீதிமன்றத்திற்கு தெரியும். 🤔🤔🤔
Rate this:
Cancel
Ellamman - Chennai,இந்தியா
13-செப்-202013:36:12 IST Report Abuse
Ellamman நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு என்ன நிலையில் உள்ளது???
Rate this:
Ellamman - Chennai,இந்தியா
13-செப்-202013:45:56 IST Report Abuse
Ellammanமத்திய அரசு. இதெற்கெல்லாம் பொறுப்பேற்கவேண்டும்... இப்படிப்பட்ட அநியாயங்களை வேரறுக்க இயலாத அரசு.. இப்படிப்பட்ட உயிர் பலி நடக்க காரணம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X