பொது செய்தி

தமிழ்நாடு

புதிதாக 7 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்க தமிழக அரசு அனுமதி

Updated : செப் 12, 2020 | Added : செப் 12, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
ArtsAndScience_College, Tamilnadu, Permission

சென்னை: தமிழகத்தில் புதிதாக 7 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் மண்டல கல்லூரிக் கல்வி இயக்குநர்களுக்கு கடிதம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில் தமிழகத்தில் உயர்கல்வி பயில்வோர் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் சட்டசபையில் முதல்வர் இபிஎஸ், 110 விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதன்படி, கோயம்புத்தூர் மாவட்டம் புலியகுளம் பகுதியில் ஒரு அரசு மகளிர் கல்லூரியும், கரூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், அரியலூர், நாகப்பட்டினம், விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் இருபாலர் பயிலும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளன.


latest tamil news


இந்த கல்லூரிகளில் இந்த கல்வியாண்டே முதலே மாணவர் சேர்க்கை நடத்தி, வகுப்புகளை தொடங்க மண்டல கல்வி இணை இயக்குநர்களுக்கு கல்லூரி கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த கல்லூரிகளில் பி.ஏ., தமிழ், பி.ஏ., ஆங்கிலம், பி.காம்., பி.எஸ்சி., கணிதம், பி.எஸ்சி., கணினி அறிவியல் ஆகிய 5 பாடப்பிரிவுகள் ஆரம்பிக்கப்பட உள்ளன.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அருணாசலம், சென்னை முதலில் கட்டிடம், மற்ற கட்டமைப்புகள் தயாராக இருக்கின்றனவா? அது இல்லாமல் 110 மூலம் மக்களுக்கு 111?
Rate this:
Cancel
12-செப்-202015:35:15 IST Report Abuse
ஆரூர் ரங் பச்சையப்பா பிரேசிடன்சி நந்தனம் மாதிரி ரூட் தல 👹நிறைய உருவாவர். அரசு நடத்தினா அதுதான் நடக்கும்
Rate this:
Cancel
12-செப்-202015:16:19 IST Report Abuse
Indian Kumar ( Nallavarkal  Aatchikku VARAVENDUM ) தேர்தலுக்குள் இன்னும் நிறைய அறிவிப்புகள் வரும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X