உத்தவை விமர்சித்த கார்ட்டூனை பகிர்ந்த முன்னாள் கடற்படை அதிகாரி மீது தாக்குதல்

Updated : செப் 12, 2020 | Added : செப் 12, 2020 | கருத்துகள் (32)
Share
Advertisement
ex-Navy, officer, beaten, Uddhav, cartoon, Maharashtra

மும்பை: மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவை விமர்சித்து வந்த கார்ட்டூனை, வாட்ஸ் ஆப் செயலியில் பகிர்ந்த முன்னாள் ராணுவ வீரரை சிவசேனா தொண்டர்கள் கடுமையாக தாக்கினர்.

மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் வசித்து வருபவர் மதன் சர்மா(62). முன்னாள் கடற்படை வீரரான இவர், முதல்வர் உத்தவ் தாக்கரேவை விமர்சித்து வந்த கார்ட்டூனை வாட்ஸ் ஆப் செயலியில் பகிர்ந்துள்ளார். இதனையடுத்து அவருக்கு மொபைலில் மிரட்டல் வந்தன. தொடர்ந்து, நேற்று (செப். 11) காலை 11:30 மணியளவில், கந்திவலி புறநகர் பகுதியான லோகந்வாலா காம்ப்ளக்சில், சிவசேனா கட்சியை சேர்ந்த 8- 10 கும்பல் அவரை வீட்டு வாசலில் கடுமையாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து, அவர்களுக்கு ரூ.5 ஆயிரம் உறுதித்தொகையின் பேரில், ஜாமின் வழங்கப்பட்டது.


latest tamil news


இது தொடர்பாக மத்திய அமைச்சர் விகே சிங் கூறுகையில், மும்பையில் நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் அதிர்ச்சியை அளிக்கிறது. 62 வயதான முன்னாள் கடற்படை வீரர் , குண்டர்களால் தாக்கப்பட்டுள்ளார். கார்ட்டூனை பகிர்ந்ததற்காக, ஒருவர் தாக்கப்பட்ட வேதனையை பாதுகாப்பு படையில் உள்ளவர்கள் அனைவரும் உணர்வார்கள். முதல்வர் உத்தவ்தாக்கரே, தலைவர் மற்றும் தேசியவாதி என்றால், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறியுள்ளார்.

மதன்சர்மா தாக்கப்பட்ட சம்பவம், அங்குள்ள கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பேர் பகிர்ந்து வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
13-செப்-202020:47:44 IST Report Abuse
blocked user கருத்து சுதந்திரம் பற்றி வாய்கிழிய பேசும் காங்கிரஸ் மற்றும் திமுக விஞ்ஞானிகள் இதற்குப்பதில் சொல்ல வேண்டும்...
Rate this:
Cancel
Jayvee - chennai,இந்தியா
13-செப்-202019:15:26 IST Report Abuse
Jayvee மகாராஷ்டிராவின் திமுக சிவசேனா.. கருணாவை போல அப்பா.. சுடலையை போல பிள்ளை.. நல்ல மேட்சிங்.. ரவுடித்தனம்
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
13-செப்-202019:36:27 IST Report Abuse
 Muruga Velஅடுத்த தலைமுறையை விட்டுட்டீங்க ...உதயநிதி மாதிரி ஆதித்ய தாக்கரே ..அங்கியும் உத்தவ் தாக்கரே சகோதரரின் குடும்ப வாழ்க்கையில் பல மர்மங்கள் .....
Rate this:
Cancel
Hari - chennai,இந்தியா
13-செப்-202014:17:31 IST Report Abuse
Hari மறுபடியும் தாதாக்களின் சொர்க்கபுரிய மாறுது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X