மாயமான 5 இந்திய வாலிபர்களை சீன ராணுவம் ஒப்படைத்தது

Updated : செப் 12, 2020 | Added : செப் 12, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி: அருணாச்சல பிரதேசத்தில் மாயமான ஐந்து வாலிபர்களையும், இந்திய ராணுவ அதிகாரிகளிடம், இன்று(செப்., 12) சீன ராணுவம் ஒப்படைத்தது.அருணாச்சல பிரதேசத்தின் சுபன்சிரி மாவட்டத்தில், சீன எல்லை பகுதியில் உள்ள நச்சோ கிராமத்தை சேர்ந்த ஐந்து இளைஞர்கள், சில நாட்களுக்கு முன் மாயமாயினர். இவர்களை, சீன ராணுவத்தினர் பிடித்து சென்றதாக கூறப்பட்டது. வனப்பகுதிக்கு அவர்களுடன் சென்ற
 இளைஞர்கள், சீனா, அருணாச்சல பிரதேசம், இந்திய ராணுவம், சீன ராணுவம்,

புதுடில்லி: அருணாச்சல பிரதேசத்தில் மாயமான ஐந்து வாலிபர்களையும், இந்திய ராணுவ அதிகாரிகளிடம், இன்று(செப்., 12) சீன ராணுவம் ஒப்படைத்தது.

அருணாச்சல பிரதேசத்தின் சுபன்சிரி மாவட்டத்தில், சீன எல்லை பகுதியில் உள்ள நச்சோ கிராமத்தை சேர்ந்த ஐந்து இளைஞர்கள், சில நாட்களுக்கு முன் மாயமாயினர். இவர்களை, சீன ராணுவத்தினர் பிடித்து சென்றதாக கூறப்பட்டது. வனப்பகுதிக்கு அவர்களுடன் சென்ற மேலும் இருவர் திரும்பி வந்து, உறவினர்களிடம் தெரிவித்த பின்னர் தான் 5 பேரும் மாயமானது தெரியவந்தது. எல்லைப்பகுதி அருகே அவர்களை சீன ராணுவம் கடத்தி சென்றதாக அவர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக, நம் ராணுவத்தினர் அனுப்பிய 'ஹாட்லைன்' செய்திக்கு, சீன ராணுவம் பதில் அனுப்பியது.


latest tamil news


மாயமான 5 வாலிபர்களும், தங்கள் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, சீன ராணுவம் கூறியுள்ளது. 'அவர்களை, நம் அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது' என, மத்திய அமைச்சர், கிரின் ரிஜிஜு கூறியிருந்தார்.

இந்நிலையில், மாயமான 5 வாலிபர்களையும் சீன ராணுவம் விடுவித்தது. கிபிது என்ற இடத்தில், 5 பேரையும், தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த இந்திய ராணுவத்தினர், அவர்களை கொரோனா விதிப்படி 14 நாட்கள் தனிமைபடுத்தியது. பின்னர் அவர்கள், உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shake-sphere - India,இந்தியா
12-செப்-202019:36:19 IST Report Abuse
 Shake-sphere இவர்களை கட்டி வைத்து பிரியாணி போட்டு சமாளிக்க முடியாது என்பதனால் ஒப்படைத்துவிட்டனர்
Rate this:
Cancel
Indian Ravichandran - Chennai,இந்தியா
12-செப்-202017:39:57 IST Report Abuse
Indian  Ravichandran ஒப்படைக்க வில்லை என்றால் ஆப்பு பெருசாயிருக்குமுன்னு சப்பை முகனுக்கு தெரிந்ததால் விட்டுட்டான். முன்பு போன்ற பொம்மை அரசு இருந்தால் சப்பை மூக்கன் ஆட்டம் காட்டியிருப்பான் இப்போ இருப்பது மோடி அரசு தோலை உரிப்பருனு தெரியும்.
Rate this:
Cancel
Nagarajan D - Coimbatore,இந்தியா
12-செப்-202017:13:44 IST Report Abuse
Nagarajan D உயிருடன் இருப்பது ஒரு நல்ல செய்தி... அவர்களின் மன நிலை அறிந்து அதற்கு தக்கவாறு அடுத்து நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்... அவர்கள் மன அளவில் ஏதேனும் பாதிப்புக்கு ஆளாக்கப்பட்டுள்ளனரா என தீர விசாரிக்க படவேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X