பொது செய்தி

இந்தியா

விமானத்திற்குள் புகைப்படம்: டிஜிசிஏ எச்சரிக்கை

Updated : செப் 12, 2020 | Added : செப் 12, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
விமானங்கள், டிஜிசிஏ, புகைப்படம், தடை, எச்சரிக்கை

புதுடில்லி : விமானத்திற்குள், யாரேனும் புகைப்படம் எடுப்பது கண்டுபிடிக்கப்பட்டால், குறிப்பிட்ட அந்த விமானத்திற்கு அந்த வழித்தடத்தில் பறக்க இரு வாரங்களுக்கு தடை விதிக்கப்படும் என மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் எச்சரித்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர், சண்டிகரில் இருந்து மும்பை வந்த தனியார் விமானத்தில் நடிகை கங்கனா ரணாவத் பயணம் செய்தார். அப்போது, மீடியாவை சேர்ந்தவர்கள், பாதுகாப்பு விதிகளை மீறியும், சமூக விலகலை கடைபிடிக்காமலும் புகைப்படம் எடுத்தனர். இது வீடியோவாக வெளியாகியது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்ட விமானத்திற்கு, பயணிகள் விமானப்போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் டிஜிசிஏ வெளியிட்ட அறிக்கை: பயணிகள் விமானத்தில் யாரேனும் விதிமுறைகளை மீறி யாரேனும் விமானத்திற்குள் புகைப்படம், வீடியோ எடுத்தது கண்டுபிடிக்கப்பட்டால், அந்த விமானம், அந்த குறிப்பிட்ட வழித்தடத்தில் இரு வாரங்கள் பறக்க தடை விதிக்கப்படும்.விமான விதி 1937, விதி 13ன் யின் கீழ் விமானத்தில் பயணிக்கும் எந்த பயணியும் விமானத்திற்குள் புகைப்படம் எடுக்கக்கூடாது.


latest tamil news



விமான போக்குவரத்து அமைச்சகம், டிஜிசிஏ அனுமதியின்றி புகைப்படம் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகள் இருந்த போதிலும், சில சமயங்களில் விமான நிறுவனங்கள் இந்த நிபந்தனைகளை பின்பற்ற தவறிவிட்டன. இதை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என தீவிரம் காட்டுவதில்லை. விதிகளை மீறி புகைப்படம் எடுத்த நபர் மீது நடவடிக்கை எடுத்த பிறகு தான் பயணிக்க அனுமதிக்க முடியும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
13-செப்-202012:48:38 IST Report Abuse
 Muruga Vel பிரதமரோ மாநில முதல்வரோ விமானம் மூலம் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டால் அதை படமா செய்தியாக போடறாங்க
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
13-செப்-202010:26:46 IST Report Abuse
 Muruga Vel கேமரா மற்றும் மொபைல் சாதனங்களை கேபினில் அனுமதிக்காமல் இருந்தாலே பிரச்னை தீரும் ..சினிமாவே பிளேனுக்குள்ள எடுக்கறாங்க ..போட்டோ எடுத்தா என்ன ..
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
13-செப்-202007:46:23 IST Report Abuse
blocked user பைலட்டை மாட்டிவிட இப்படி ஒரு ஏற்பாடா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X