பொது செய்தி

இந்தியா

இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆப்கனில் இடம் கூடாது: ஜெய்சங்கர்

Updated : செப் 12, 2020 | Added : செப் 12, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஆப்கன், ஆப்கானிஸ்தான்,  இந்தியா, ஜெய்சங்கர், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், வெளியுறவு அமைச்சர், afghanistan, jaishankar, india, FM jaishankar,  fm, foreign Minister,

புதுடில்லி: இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆப்கன் மண்ணில் இடம் தரக்கூடாது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

ஆப்கனில் அமைதி பேச்சுவார்த்தை தொடர்பாக தோகாவில் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில், 'வீடியோ கான்பரன்சிங்' வாயிலாக ஜெய்சங்கர் பேசியதாவது: இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆப்கன் மண்ணில் இடம்தரக்கூடாது. நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்படும் அமைதி ஏற்பட, போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட இந்தியா ஆதரவு அளிக்கும். ஆப்கன் தலைமையில் அமைதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுடன், சிறுபான்மையினர் மற்றும் பெண்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும்.


latest tamil news


ஆப்கனின் வளர்ச்சி கூட்டணியில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு இருக்கும். ஆப்கன்னுக்கு லட்சக்கணக்கான டன் உணவு தானியங்களை இந்தியா வழங்கியுள்ளது. மருத்துவ சிகிச்சைக்காக ஆப்கன் நாட்டினர் இந்தியாவுக்கு வர வசதி ஏற்படுத்தி கொடுத்துள்ளோம். இது ஆப்கனின் ஸ்திரத்தன்மை, வளர்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு, எங்களது உறுதித்தன்மைக்கு சில எடுத்துக்காட்டுகள். ஆப்கனில் 400க்கும் கூடுதலான வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆப்கனுடனான இந்தியாவின் உறவு வலிமையுடனும், அசைக்க முடியாத வகையிலும் உள்ளது. எப்போதும் நாங்கள் சிறந்த நட்பு நாடுகளாக இருந்துள்ளோம். எதிர்காலத்திலும் தொடரும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
13-செப்-202004:17:34 IST Report Abuse
J.V. Iyer இவைங்களை நம்ப முடியாது. ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X