பொது செய்தி

இந்தியா

கோவாக்சின் தடுப்பூசி சோதனை: முதல் கட்டத்தில் வெற்றி

Updated : செப் 12, 2020 | Added : செப் 12, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
covaxin, vaccine, test, animals, success, first stage, கோவாக்சின், விலங்குகள், பரிசோதனை, வெற்றி

மும்பை: கோவாக்சின் தடுப்பூசியை விலங்குகளுக்கு செலுத்தி பார்த்ததில் நல்ல விளைவுகள் கிடைத்திருப்பதாக பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்நிறுவனமும் ஐ.எம்.சி.ஆர்., எனப்படும் இந்திய மருத்து கவுன்சிலும் இணைந்து கொரோன தடுப்பூசி மருந்தாக கோவாக்சினை தயாரித்துள்ளன. இம்மருந்து நாடு முழுவதும் 12 பரிசோதனை மையங்களில் பரிசோதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 20 செம்முகக் குரங்குகளை பயன்படுத்தி பரிசோதனை நடத்தப்பட்டது. 20 குரங்குகளும் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அனைத்து குரங்குளிடமும் நடத்தப்பட்ட முதற்கட்ட பரிசோதனையில் தடுப்பூசியானது கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது கட்ட தடுப்பூசி பரிசோதனைக்கும் பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sundarsvpr - chennai,இந்தியா
12-செப்-202021:40:41 IST Report Abuse
sundarsvpr கொரானா தாக்குதலை எதிர்த்து தளர்வுகள் செய்து உள்ளோம். தளர்வின் நோக்கம் நிறைவேற விரைவில் மருந்து தேவை. கிடைக்கும் நம்பிக்கையே வாழ்வு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X