பொது செய்தி

இந்தியா

ஸ்டார்ட் அப் இந்தியா தரவரிசை பட்டியல் ; கர்நாடகா,கேரளா முதலிடம்

Updated : செப் 12, 2020 | Added : செப் 12, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement

புதுடில்லி : இந்தியாவில் ஸ்டார்ட் அப் தொழில்களை ஊக்குவித்து சிறந்து விளங்கும் மாநிலங்களின் தரவரிசை பட்டியலில் கர்நாடகா, கேரளா முதலிடத்தில் உள்ளதாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்தார்.latest tamil newsஇந்தியாவில் ஸ்டார்ப் அப் தொழில்களை ஊக்குவித்து சிறந்து விளங்கும் மாநிலங்களின் தரவரிசை பட்டியலில் கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் முன்னணியில் உள்ளன. ஸ்டார்ட்-அப் ஈகோ சிஸ்டம் எனப்படும் புது நிறுவனங்களை தொடங்குவதற்கான சூழலுக்கு ஆதரவளிக்கும் பல்வேறு காரணிகளை அடிப்படையாக கொண்டு, மாநிலங்களின் இந்த தரவரிசைப் பட்டியலை மத்திய அரசு ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. 2019 ஆம் ஆண்டுக்கான பட்டியலை மத்திய வர்த்தகம், தொழில்கள் மற்றும் ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று வெளியிட்டார்.


latest tamil newsஇதில், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்கள் முதலிடத்தை பிடித்துள்ளது. குஜராத் மாநிலம் இரண்டாவது இடத்தை தக்கவைத்துள்ளது. புதிய தொழில் தொடங்குவதற்கான சிறந்த தலைமைகளை கொண்ட மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா, பீஹார், ஒடிசா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன. தொடக்க கண்டுபிடிப்பாளர்களுக்கு வசதிகள் மற்றும் பிற வசதிகளை வழங்குவதில் கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. புதிய வகையான திட்டங்களுக்கு பொருத்தமான தொழில்நுட்ப ஆதரவு மற்றும் புதுமையின் சவால்களுக்கு விரைவான தீர்வுகள் போன்ற காரணிகள் இதில் அடங்கும்.


latest tamil newsஸ்டார்ட் - அப் ஈகோ சிஸ்டத்தில் வளர்ந்துவரும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம், ஆந்திர பிரதேசம், அசாம், சத்தீஸ்கர், டில்லி, உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், இமாசலப் பிரதேசம் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.


latest tamil newsகடந்த ஆண்டு புதிய தொழில் தொடங்குவதற்கான தரவரிசையில், வளர்ந்து வரும் தொழில்முனைவோருக்கான தொடக்க சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான சிறந்த மாநிலமாக குஜராத் இடம் பெற்றது. அத்துடன் கர்நாடகா, கேரளா, ஒடிசா மற்றும் ராஜஸ்தான் ஆகியவை சிறந்த மாநிலமாக தெரிவிக்கப்பட்டன.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
13-செப்-202004:22:41 IST Report Abuse
J.V. Iyer அரியர் பாஸ் கண்டுபிடித்த எடப்பாடியாருக்கு நோபல் பரிசு வழங்கவேண்டும்.
Rate this:
Cancel
sundarsvpr - chennai,இந்தியா
12-செப்-202020:58:11 IST Report Abuse
sundarsvpr கட்சி மனப்பான்மை இல்லாமல் திட்டங்களுக்கு ஒவ்வொரு மாநிலங்களும் அனுசரணை மனப்பான்மையுடன் அணுகினால் பின்தங்குதல் என்ற நிலை எந்த மாநிலத்திற்கும் ஏற்படாது. அப்போதுதான் ஆளும் கட்சி எதிர் கட்சி என்ற நிலை குறைந்து திட்ட பயன்கள் முழுமையாய் மக்களுக்கு சென்று அடையும். ஆரோக்கியமான அரசியல் இருக்கும்.
Rate this:
Cancel
12-செப்-202020:36:22 IST Report Abuse
ஆரூர் ரங் 530 பொறியியற்க் கல்லூரிகள் இருக்கும் தமிழ்நாட்டில் ஆராய்ச்சிமூலம் எத்தனை உருப்படியான பேடன்ட் வாங்கியுள்ளனர்? ஓசிபாஸ் தான் மாணவர்களின் 😎ஒரே லட்சியக் கனவுன்னா என்னத்தக் கண்டுபிடிப்பாங்க ? 😀
Rate this:
12-செப்-202021:02:16 IST Report Abuse
Janarthanan (குடும்ப ஆட்சிக்கு முடிவுரை எழுத வேண்டும்)புதிய கண்டிபிடிப்பு எக்ஸாம் காசு கட்டமா எப்படி அறியர் பாஸ் பண்ணலாம் என்பது தான் ?? சுடலை தான் அதற்க்கு தலைவரு ??...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X