சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நீட் தேர்வு அச்சத்தால் மேலும் ஒரு மாணவர் தற்கொலை

Updated : செப் 12, 2020 | Added : செப் 12, 2020 | கருத்துகள் (31)
Share
Advertisement

தருமபுரி: நீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் மேலும் ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

தர்மபுரி மாவட்டம் தர்மபுரி, செந்தில் நகரைச் சேர்ந்த மாணவர் ஆதித்யா (20). இவர் இந்த வருடம் நீட் தேர்வுக்கு தயாராகி வந்திருந்தார். இவர் ஏற்கனவே நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்ததால் இரண்டாவது முறை தேர்வு எழுத தயாராகி வந்தார்.



latest tamil news



நாளை (செப்.,13) தேர்வு எழுத வேண்டிய நிலையில் மாணவர் இன்று (செப்.12) தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தேர்வு நெருங்கியதால் தோல்வி பயம் காரணமாக மாணவர் தற்கொலை செய்து கொண்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில் இன்று காலை (செப்.,12) மதுரையைச் சேர்ந்த ஜோதிஸ்ரீ (19) நீட் தேர்வு பயம் காரணமாக கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த சம்பவம் மாநிலம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் தருமபுரி மாணவர் தற்கொலை செய்து கொண்டது தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-செப்-202005:55:51 IST Report Abuse
Ganesan Madurai நமது மாணவர்கள் இவ்வளவு கோழைகளா? இல்லை இது நமது சமூகத்தின் அவலமா? இல்லை திராவிட கலாசாரத்தின் வெளிப்பாடா? இல்லை இதுதான் நமது திராவிட அரசுகள் இருமொழிக் கொள்கையோடு 1967ல் இருந்து கற்றுக் கொடுத்த கல்வியின் தரமா? வேறு எந்த மாநிலத்திலும் இந்த கேவலமான நிலை இல்லையே. இவர்களால் எப்படி தமிழக எல்லை தாண்டி சவால்களை சமாளிக்க முடியும்? முப்பது மொழி கற்றுக்கொள்ள வேண்டிய இன்றைய கட்டாயத்தில் இரண்டே மொழிகளுடன் அதுவும் வெறும் அடிப்படையான அளவில் பேச எழுத படிக்க கற்கும் இவர்கள்தான் இன்றைய உயர்நிலைப் பல்கலைக்கழகங்களின் மற்றும் பெரிய கார்பரேட் நிறுவனங்களில் பணிபுரியும் தகுதி படைத்தவர்களா? இந்த அளவில்தான் நாம் தமிழக மாணவர்களை அவர்களின் எதிர்காலத்தை எதிர்நோக்க பழக்குகிறோம் என்பதுதான் நிதர்சனமான உண்மை. இனி வருங்காலத்தில் மற்ற மாநிலங்களில் தகுதியுள்ள மாணவர்கள் எண்ணிக்கை உயரும்போது நாமும் பெருமையுடன் வருடாவருடம் உயரும் தமிழக மாணவர்களின் தற்கொலைகளின் எண்ணிக்கையை கூறி பெருமைபடும் அவலம் வரப்போகிறது.
Rate this:
Darmavan - Chennai,இந்தியா
13-செப்-202007:13:58 IST Report Abuse
Darmavanதமிழக அரசியல் வியாதிகள் இதை தூண்டிவிடுகின்றன .இருமொழியும் அப்படியே..மத்திய அரசி பழசக் மெயில் செய்யும் தந்திரம்.கேவல அரசியல்.இப்படிப்பட்ட கோழைகள் வாழ்வின் சவால்களை எப்படி ஏற்பார்கள்....
Rate this:
S Bala - London,யுனைடெட் கிங்டம்
13-செப்-202008:58:45 IST Report Abuse
S Balaஇந்தி கற்றுக்கொண்டால் நீட் தேர்வில் தேறிவிட முடியுமா? அப்படியானால் நீட் தேர்வு இந்தியில் எழுதினால் சுலபமா?...
Rate this:
Cancel
Sree -  ( Posted via: Dinamalar Android App )
13-செப்-202005:03:33 IST Report Abuse
Sree இதன் பின்னணியில் உள்ளவற்றை CBI யை கொண்டு விசாரிக்க வேண்டும்....
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
13-செப்-202002:19:24 IST Report Abuse
வெகுளி சமசீர் கல்வியின் சாதனை பாரீர்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X