பொது செய்தி

இந்தியா

பீகார்: மூன்று பெட்ரோலிய திட்டம்: துவக்கி வைக்கிறார் பிரதமர்

Updated : செப் 13, 2020 | Added : செப் 12, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement

புதுடில்லி: பீகார் மாநிலத்தில் எல்.பி.ஜி.,குழாய் திட்டம் மற்றும் பாட்டில் ஆலைகளை பிரதமர் மோடி இன்று (13ம் தேதி) வீடியோ கான்பரன்சிங் மூலம் துவக்கிவைக்கிறார்.



latest tamil news



பீகார் மாநிலத்தில் இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் ஹால்டியா துர்காபூரில் எல்.பி.ஜிஆலை மற்றும் பாங்ககாவில் உள்ள எல்.பி.ஜி.,பாட்லிங் ஆலை உள்ளிட்ட மூன்று ஆலைகள் நிறுவப்பட்டுள்ளது. இதனை பிரதமர் மோடி நாட்டிற்காக நாளை (13 ம் தேதி) அர்பணிக்க உள்ளார். இந்த விழாவில் மாநில முதல்வர் நிதிஷ்குமார் கலந்து கொள்கிறார்.

இது குறித்து ஐ.ஓ.சி., நிறுவனம் தெரிவித்து இருப்பதாவது:

கடந்த 2019 ம் ஆண்டு பிப்., 17 ம் தேதி இத்தொழிற்சாலைகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. அதில்பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
தற்போது திட்டம் செயல்பட உள்ளது. பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநில மக்களுக்கு உதவிடும் வகையில் 131.75 கோடி ரூபாய் செலவில் இத் தொழிற்சாலை கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு நாளைக்கு 40 ஆயிரம் சிலிண்டர்களை கையாளமுடியும்.மாநிலத்தில் எல்பிஜி தேவை அதிகரித்து வருவதன் மூலம் பீகாரின் 'ஆத்மனிர்பார்த்தா' (தன்னம்பிக்கை) அதிகரிக்கும் இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை உருவாக்கும் அது மட்டுமல்லாது மாநிலத்தின் சமையல் எரிவாயு தேவையை பூர்த்தி செய்ய உதவும் என ஐ.ஓ.சி., நிறுவவனம் தெரிவித்துள்ளது.


latest tamil news




அடுத்து வரும் 10 நாட்களில் பீகார் மாநிலத்தில் சுமார் 16 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள மேம்பாட்டு பணிகளை பிரதமர் துவக்கி வைக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan - thane,இந்தியா
13-செப்-202010:11:17 IST Report Abuse
rajan மதுரை எய்ம்ஸ் எங்க காணோம்
Rate this:
Cancel
bigu -  ( Posted via: Dinamalar Android App )
13-செப்-202007:35:57 IST Report Abuse
bigu மக்களை எவ்வளவு சீப்பா நினைக்கிறாங்க இந்தியா பூராம் மக்களை நடக்கவிட்டு வேடிக்கை பார்த்துவிட்டு இப்போ எலெக்ஷன் வருவதால் திட்டம் என்று சொல்லும் பிரதமர் ....
Rate this:
Cancel
முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு ,இந்தியா
12-செப்-202022:08:22 IST Report Abuse
முடியட்டும் விடியட்டும் ::  தமிழன் எல்லாம் தேர்தல் வருது இல்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X