சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.1,495 கோடி மோசடி சி.பி.ஐ., வழக்குப்பதிவு

Added : செப் 12, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

சென்னை:சென்னை, ராயப்பேட்டை, ஒயிட்ஸ் சாலையில் செயல்பட்டு வரும், 'சுரானா பவர் லிமிடெட்' நிறுவனம், ஒன்பது வங்கிகளில், 1,495 கோடி ரூபாய் மோசடி செய்து விட்டதாக, சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளர்.

சென்னை, ராயப்பேட்டை, ஒயிட்ஸ் சாலையில், சுரானா பவர் நிறுவனம் செயல்படுகிறது. இந்நிறுவனம், 2009ல், கர்நாடக மாநிலம், ரெய்ச்சூர் மாவட்டத்தில், அனல் மின் நிலையம் அமைக்க திட்டமிட்டது.இதற்காக, சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள, ஐ.டி.பி.ஐ., வங்கி உட்பட, ஒன்பது வங்கிகளில், 1,800 கோடி ரூபாய் கடன் கோரியது.

அதற்காக, சில கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அடமானமாக, அந்நிறுவனம் வைத்தது. அதை ஏற்று, சுரானா பவர் நிறுவனத்திற்கு, ஒன்பது வங்கிகள், 1,495 கோடி ரூபாய் கடன் வழங்கின.இந்நிலையில், பல்வேறு காரணங்களால், அனல் மில் நிலையம் அமைக்கும் திட்டம், கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், வங்கிகள் கடனை வசூலிக்க முடிவு செய்தன. அடமானமாக கொடுத்த சொத்துக்கள், கடன் தொகைக்கு போதுமானதாக இல்லை.

மேலும், அந்நிறுவனம்,கடன் பெற, போலி கணக்குகளை தாக்கல் செய்ததும், வாங்கிய கடன் தொகையை தவறாக பயன்படுத்தியதும் தெரிய வந்தது.இது குறித்து, ஒன்பதுவங்கிகள் சார்பில், சென்னை, அண்ணா சாலையில் செயல்படும், ஐ.டி.பி.ஐ., வங்கியின் பொது மேலாளர் பூமாலட்சுமி, பெங்களூரில் உள்ள, சி.பி.ஐ., அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.சி.பி.ஐ., அதிகாரிகள், சுரானா நிறுவனத்தின் தலைவர் கவுதம்ராஜ் சுரானா, இயக்குனர்கள் சாந்திலால் சுரானா, விஜயராஜ் சுரானா, நிர்வாக இயக்குனர் தினேஷ் சந்த் சுரானா உட்பட, ஆறு பேர் மீது, நேற்று வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramachandran Rajagopal - Sundivakkam,இந்தியா
13-செப்-202009:38:16 IST Report Abuse
Ramachandran Rajagopal இந்த நாட்டில் வங்கிகள் நேர்மையானவர்களுக்கு சில ஆயிரம் கூட கடன் வழங்குவதில்லை.காரணம் அவர்களால் அந்த வங்கிகளில் பணிபுரிபவர்களுக்கு ஆதாயம் இல்லை.ஆனால் ஏமாற்றுப் பேர்வழிகளுக்கெல்லாம் ஆயிரக் கணக்கான கோடிகள் கடன் கொடுத்து அதனால் ஆதாயம் அடைந்து சில காலம் கழித்து பெயருக்காக வழக்கு தொடர வைத்து குற்றவாளிகள் தப்பித்துக் கொள்கின்றனர்.இவர்களுக்கு ஆளும் அதிகார வர்க்கமும் உதவி செய்து ஆதாயம் அடைகின்றது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X