அரசியல் செய்தி

தமிழ்நாடு

கொரோனா இறப்பு புள்ளி விபர மோசடி ஆபத்தானது: கனிமொழி

Added : செப் 12, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

சென்னை:'கொரோனா இறப்பு புள்ளி விவரங்களில், அ.தி.மு.க., அரசு தொடர்ந்து, மோசடி செய்து வருகிறது. இது ஆபத்தான போக்கு' என, தி.மு.க., மகளிர் அணி செயலர், கனிமாழி கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:கொரோனா தொற்று தொடர்பான, தமிழக அரசின் புள்ளி விவரங்கள், தொடர்ந்து முரண்பாடுகளுடன் வெளியாகின்றன. தொற்றால் பாதிக்கப்பட்ட, ௯,௫௦௦ பேர், மீண்டும் பரிசோதிக்கப்படாமல், குணமடைந்தவர்கள் எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் தான், கொரோனா பாதிப்பில் இருந்து, குணமாவோர் எண்ணிக்கை அதிகம் என, அரசு சொல்வது, முழுக்க பொய்யோ என்ற, சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், ௨௩௬ பேரின் இறப்பை, கணக்கில் சேர்க்கவில்லை என, ஜூன் மாத தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில், கொரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதாக, ஒரு பிம்பத்தை கட்டமைக்க, அரசு தொடர்ந்து புள்ளி விவரங்களில், மோசடி செய்து வருகிறது. இது மிக, மிக ஆபத்தான போக்கு.இவ்வாறு, கனிமொழி கூறியுள்ளார்.


தற்கொலை அல்ல; கொலை!



அவரது மற்றொரு அறிக்கை:'நீட்' தொடர்பாக நடக்கும் மரணங்கள் தற்கொலைகள் அல்ல. மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடத்தும் கொலைகளே. போலீஸ்துறை அதிகாரி முருகசுந்தரத்தின் மகள் ஜோதிதுர்கா, நீட் தேர்வு அச்சத்தால், துாக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். மாணவர்கள் தற்கொலை தொடர்கதையாகி வருகிறது.

கடந்த வாரம், தேனியை சேர்ந்த விக்கிரபாண்டி; உளுந்துார்பேட்டையை சேர்ந்த நித்யஸ்ரீ ஆகியோர் ஆன்லைன் வகுப்புகளை கையாள முடியாமல், தற்கொலை செய்து கொண்டு உள்ளனர்.அதே வாரத்தில், அரியலுார் மாவட்டத்தை சேர்ந்த விக்னேஷ் என்பவர், நீட் தேர்வு அச்சத்தால், தற்கொலை செய்து உள்ளார். இன்னும், எத்தனை உயிர்களை இழக்க போகிறோம்? இவ்வாறு, கனிமொழி கூறிஉள்ளார்.


'ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கு போராடியவர்'

கனிமொழியின் மற்றொரு அறிக்கை: தேவேந்திரகுல மக்களின் போர்க்குரலாக ஒலித்தவர் விடுதலை போராட்ட வீரர் இம்மானுவேல் சேகரன். ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி மற்றும் இதர உரிமைகளுக்காக, தன் வாழ் நாள் முழுதும் போராடினார். அம்மக்களின் உயர்வுக்காக, அவர் ஆற்றிய பணிகள் ஏராளம்.'தேவேந்திரகுல வேளாளர் என, அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை, தி.மு.க., வலியுறுத்தும்' என, இம்மானுவேல் சேகரன் நினைவு நாளில், ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
13-செப்-202013:14:09 IST Report Abuse
Bhaskaran ஹிந்திப்பிரச்சனை பிசுபிசுத்தத்தால் இப்போ நீட் பிரச்னையை கையில் எடுத்திருக்காங்க அக்கா
Rate this:
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
13-செப்-202002:58:46 IST Report Abuse
Baskar கனிமொழி இந்த அரசை பற்றி பேச அருகதை அற்றவர். இதே உங்கள் ஆட்சியை இருந்தால் லட்ச கணக்கில் மரணங்களும் கிட்னி திருட்டுகளும் நடந்து இருக்கும். பார்த்தாயா இன்று உங்கள் கட்சி எம்.பி நிலா மோசடியில் சொத்துக்களை இழந்து இருக்கிறார்.இந்த சொட்டதெல்லாம் எப்படி வந்தது இவருக்கு. விரைவில் வெளிச்சத்திற்கு வரும் உன் லட்சணம் ராசா இன்னும் சில பேர்களின் நிலை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X