பொது செய்தி

தமிழ்நாடு

நெல் ஊக்கத்தொகை காத்திருக்கும் கழகம்

Added : செப் 12, 2020
Share
Advertisement

சென்னை:நெல் கொள்முதல் சீசன், அடுத்த மாதம் துவங்க உள்ள நிலையில்,விவசாயிகளுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை தொடர்பாக, தமிழக அரசின் அறிவிப்பை எதிர்பார்த்து, நுகர்பொருள் வாணிபக் கழகம் காத்திருக்கிறது.

தமிழக விவசாயிகளிடம் இருந்து, மத்திய அரசின், இந்திய உணவு கழகம் சார்பில், நுகர்பொருள் வாணிபக் கழகம், நெல் கொள்முதல் செய்கிறது. அந்த நெல், ஆலைகளில் அரிசியாக மாற்றப் பட்டு, ரேஷன் கடைகளில் வழங்கப்படுகிறது.விவசாயிகளிடம் வாங்கப்படும் நெல்லுக்கு, 100 கிலோ எடையான, குவிண்டால் அடிப்படையில், மத்திய, மாநில அரசுகள், குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்குகின்றன.

அதன்படி, 2019 அக்டோபரில் துவங்கி, இம்மாதத்துடன் முடிய உள்ள நடப்பு சீசனில், மத்திய அரசு, குவிண்டால் சாதாரண நெல்லுக்கு, 1,815 ரூபாயும்; உயர்தரத்திற்கு, 1,835 ரூபாயும் வழங்குகிறது.அதனுடன் சேர்த்து, தமிழக அரசு, சாதாரணத்திற்கு, 50 ரூபாயும்; உயர்தரத்திற்கு, 70 ரூபாயும் ஊக்கத்தொகை வழங்குகிறது. நடப்பு சீசனில், எப்போதும் இல்லாத அளவாக, 30 லட்சம் டன்னிற்கும் அதிகமாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது.

அடுத்த மாதம், புதிய சீசன் துவங்குகிறது. அந்த சீசனுக்கு, சாதாரண தரத்திற்கு, 1,868 ரூபாயும்; உயர்தரத்திற்கு, 1,888 ரூபாயும் குறைந்தபட்ச ஆதரவு விலையாக, மத்திய அரசு, இரு மாதங்களுக்கு முன் அறிவித்தது.நெல்லுக்கு நல்ல விலை தொடர்பான அறிவிப்பு, முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டால், விவசாயிகளிடம், இடைத்தரகர்கள், வியாபாரிகளிடம் வழங்குவதை தவிர்ப்பர்.

இதையடுத்து, ஊக்கத்தொகை நிர்ணயம் குறித்து, வாணிப கழகம், தமிழக அரசுக்கு, சமீபத்தில், கடிதமும் அனுப்பியுள்ளது. அடுத்த சீசன் துவங்க, மூன்று வாரங்களே உள்ள நிலையில், ஊக்கத்தொகை தொடர்பான அறிவிப்பை எதிர்பார்த்து, வாணிபக் கழகம் காத்திருக்கிறது.

இது குறித்து, கூட்டுறவுமற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:விவசாயிகளின் கோரிக்கை மற்றும் அடுத்த ஆண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தல் காரணமாக, நெல் கொள்முதல் ஊக்கத்தொகையை, 100 ரூபாய் முதல், 200 ரூபாய் வரை உயர்த்தி வழங்க பரிசீலிக்கப்படுகிறது. இதுதொடர்பான அறிவிப்பை, அரசு விரைவில் வெளியிடும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X