ஆக்ஸ்போர்டு தடுப்பூசி பரிசோதனையை மீண்டும் தொடங்க பிரிட்டன் அனுமதி!

Updated : செப் 12, 2020 | Added : செப் 12, 2020
Share
Advertisement

லண்டன்: ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி 3-ம் கட்ட பரிசோதனையில் ஒருவருக்கு உடல் நலக்குறைவை ஏற்படுத்தியதால் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மீண்டும் பரிசோதனை தொடங்க பிரிட்டன் அரசு அனுமதி தந்துள்ளது.



latest tamil news



ஆக்ஸ்போர்டு - ஆஸ்ட்ரா செனெகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி, மனிதர்களுக்கு செலுத்தப்பட்டு 2 கட்டமாக பரிசோதிக்கப்பட்டதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டது. அதனையடுத்து மூன்றாம் கட்ட பரிசோதனை அதிக மக்களிடம் நடைபெற்று வந்தது. அதில் சமீபத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்ட ஒருவருக்கு புதிய நோய் ஏற்பட்டு அதனால் அவர் உடல்நலம் குன்றியது.


latest tamil news



உடனே பாதுகாப்பு காரணங்களுக்காக பரிசோதனை நிறுத்தி வைக்கப்பட்டது. தடுப்பூசியை மதிப்பாய்வு செய்து வந்தனர். அதன் பின்னர் பரிசோதனை முறைகள் பாதுகாப்பானது என்ற விளக்கத்தை பிரிட்டன் சுகாதார ஒழுங்குமுறை ஆணையத்திடம் தெளிவுப்படுத்தினர். அவர்கள் ஆக்ஸ்போர்டு - அஸ்ட்ராஜெனெகா நிறுவன விளக்கத்தை ஏற்றுக்கொண்டு பிரிட்டனில் மீண்டும் பரிசோதனையை தொடங்க அனுமதி தந்துள்ளனர். பிரிட்டனில் பரிசோதனை நிறுத்தப்பட்டதால் இந்தியாவில் கோவிஷீல்டு பரிசோதனை நிறுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X