அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் எவ்வளவு தேவை? தமிழகத்திடம் கேட்கிறது தேர்தல் கமிஷன்!

Added : செப் 12, 2020
Share
Advertisement

சென்னை:கொரோனா அச்சுறுத்தல் நீங்காத நிலையில், தேர்தல் வந்தால், சமூக இடைவெளியை பின்பற்றி, மக்கள் ஓட்டளிக்க வசதியாக, கூடுதல் ஓட்டுச்சாவடிகள், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் எவ்வளவு தேவைப்படும் என, மதிப்பீடு செய்யும்படி, மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு, தேர்தல்கமிஷன் உத்தரவிட்டுஉள்ளது.

தமிழகத்தில், மூன்று சட்டசபை தொகுதிகள், ஒரு லோக்சபா தொகுதி, காலியாக உள்ளன.


இடைத்தேர்தல்


இவற்றில், இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கும், ஒரு லோக்சபா தொகுதிக்கும், இடைத்தேர்தல் எப்போது வேண்டுமானாலும் நடக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது.தற்போதைய சூழலில், நவம்பர் மாதத்திற்குள், பீஹார் மாநில பொதுத் தேர்தலை நடத்த வேண்டி உள்ளது. அதனுடன் சேர்த்து, அனைத்து மாநிலங்களிலும் காலியாக உள்ள, சட்டசபை தொகுதிகள் மற்றும் லோக்சபா தொகுதி களுக்கு, இடைத்தேர்தல் நடத்த, தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.அதேபோல, தமிழக சட்டசபை பொதுத் தேர்தல், அடுத்த ஆண்டு ஏப்ரலில் நடக்க வாய்ப்புள்ளது.


நோய் பரவல்

தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் நீங்கவில்லை. நோய் பரவல் தொடர்ந்தபடி உள்ளது.எனவே, தேர்தலின் போது, மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி ஓட்டளிக்க வசதியாக, பல முன்னேற்பாடுகளை, தேர்தல் கமிஷன் துவக்கி உள்ளது. தற்போது, ஓட்டுச்சாவடிகளில், தலா, 1,500 வாக்காளர்கள் உள்ளனர்.


உத்தரவு

இதை பிரித்து, ஓட்டுச்சாவடிக்கு, 1,000 வாக்காளர்கள் என்றால், கூடுதலாக எத்தனை ஓட்டுச்சாவடிகள் அமைக்க வேண்டும்; அவற்றை தற்போதுள்ள ஓட்டுச்சாவடிகளில் அமைக்க, இட வசதி உள்ளதா; இட வசதி இல்லையென்றால், அருகில் எங்கு அமைப்பது என்ற விபரங்களை திரட்ட வேண்டும்.

கூடுதல் ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டால், ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும், எவ்வளவு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தேவை; எவ்வளவு பணியாளர்கள் தேவைப்படுவர் என, அனைத்து விபரங்களையும் தயார் செய்ய வேண்டும் என, அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும், தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.அதேபோல், வாக்காளர்பட்டியலில் உள்ள, இரட்டை பதிவுகளை நீக்க வேண்டும். புதிய வாக்காளர் பட்டியல் தயார் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், தேர்தல்கமிஷன் அறிவுறுத்திஉள்ளது.


இடைத்தேர்தல் நடக்குமா?

தமிழகத்தில், சட்டசபை இடைத்தேர்தல் நடக்குமா, நடக்காதா என்ற கேள்வி தொடர்கிறது. சென்னை, திருவொற்றியூர் சட்டசபை தொகுதி, தி.மு.க., - எம்.எல்.ஏ., - கே.பி.பி.சாமி; குடியாத்தம்தொகுதி, தி.மு.க., - எம்.எல்.ஏ., காத்தவராயன் ஆகியோர், பிப்ரவரியில் உடல் நலக்குறைவு காரணமாக இறந்தனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி, தி.மு.க., - எம்.எல்.ஏ., அன்பழகன், கொரோனாவால் பாதிக்கப்பட்டு, ஜூன், 10ம் தேதி இறந்தார்.இதனால், இம்மூன்று தொகுதிகளும் காலியாக உள்ளன. அவற்றுக்கு, ஆறு மாதங்களில் தேர்தல் நடத்த வேண்டும். ஆனால், மீண்டும் தேர்வு செய்யப்படும் எம்.எல்.ஏ.,வின் பதவிக்காலம் ஓராண்டுக்குள் முடிவடைவதாக இருந்தால், தேர்தல் நடத்த வேண்டியதில்லை.

அந்த வகையில், திருவொற்றியூர், குடியாத்தம், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதிகளுக்கு, இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை.ஆனால், கன்னியாகுமரி லோக்சபா தொகுதிக்கு, தேர்தல் நடத்த வாய்ப்புள்ளது. பீஹார் சட்டசபை தேர்தலுடன், கன்னியாகுமரி லோக்சபா தொகுதி இடைத்தேர்தல் நடத்தப்படுமா என்றஎதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து, தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது:தேர்தல் விதிமுறைகளின்படி, திருவொற்றியூர், குடியாத்தம் சட்டசபை தொகுதிகளுக்கும், கன்னியாகுமரி லோக்சபா தொகுதிக்கும், இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.வரும் ஏப்ரல் மாதம், பொதுத் தேர்தல் நடத்தப்பட உள்ளதால், இடைத்தேர்தல் நடத்தப்படுமா என்ற சந்தேகம் அனைவரிடமும் ஏற்பட்டு உள்ளது.கொரோனா, பொதுத் தேர்தல் போன்ற காரணங்களால், இடைத்தேர்தல் தேவையில்லை என, அரசு தரப்பில் கருதப்படுகிறது. அரசு தெரிவித்தால், தேர்தல் கமிஷன் பரிசீலனை செய்யும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X