பொது செய்தி

இந்தியா

கொரோனா காலத்திலும் 18 லட்சம் வீடுகள்: மோடி பெருமிதம்

Updated : செப் 13, 2020 | Added : செப் 12, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
கொரோனா காலம்,  18 லட்சம் வீடுகள் : வீட்டுவசதி திட்டம் குறித்து பிரதமர் பெருமிதம்

போபால்,: ''கொரோனா காலத்திலும், பிரதமர் வீட்டுவசதி திட்டத்தின் கீழ், நாடு முழுதும் உள்ள ஏழைகளுக்காக, 18 லட்சம் வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன,'' என, பிரதமர் மோடி, பெருமிதத்துடன் பேசினார்.ஏழைகள் மற்றும் பொருளாதார ரீதியாக பின் தங்கிய மக்களுக்கு, மத்திய அரசின் உதவியுடன் குறைந்த செலவில் வீடு கட்டித் தரும் திட்டத்தை, பிரதமர் மோடி அறிவித்தார்.


புதுமனை புகுவிழாஇந்த பிரதமர் வீட்டுவசதி திட்டத்தின் படி, வரும், 2022க்குள், அனைவருக்கும் வீடு கட்டித் தர, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட காலத்துக்குள், இரண்டு கோடி வீடுகளை கட்டித் தர திட்டமிடப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் கீழ், மத்திய பிரதேசத்தில், 1.75 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இதற்கான புதுமனை புகுவிழா நேற்று நடந்தது. பிரதமர் மோடி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடந்த இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, புதிய வீடுகளை திறந்து வைத்தார்.

இதில், பிரதமர் பேசியதாவது:மக்களின் வறுமையை போக்கும் வகையிலும், ஏழைகளுக்கு உதவும் வகையிலும், அனைவருக்கும் வீடு கட்டித் தருவதற்காக இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த கொரோனா காலத்திலும், நாடு முழுதும், 18 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. வீடுகள் கட்டும் பணிகள், முழு வீச்சில் நடந்து வருகின்றன. இந்த திட்டத்தின் கீழ், ஒரு வீடு கட்டி முடிப்பதற்கு, ஏற்கனவே, 125 நாட்களாயின. கொரோனா காலத்தில், 45 - 60 நாட்களிலேயே, வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன; இது ஒரு சாதனை. கொரோனா காரணமாக வேலையிழந்து, தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்கள், இந்த வீடு கட்டும் திட்டத்தில் முக்கிய பங்காற்றியுள்ளனர்.


நன்றிநெருக்கடியை வாய்ப்பாக பயன்படுத்தும் விஷயத்தில், இந்த திட்டம் நல்ல முன் உதாரணமாக திகழ்கிறது. கிராமப்புற பொருளாதார வளர்ச்சிக்கு, இந்த திட்டம் முக்கிய பங்கு வகித்துள்ளது. பிரதமர் வீட்டுவசதி திட்டம், ஏழைகளுக்கு வீட்டுவசதியை ஏற்படுத்தி தந்ததுடன், அவர்களது வாழ்க்கையில் நம்பிக்கையையும் ஏற்படுத்தி உள்ளது.கடுமையாக உழைக்கும் தொழிலாளர்கள், இரவில் நிம்மதியாக துாங்குவதற்கான வாய்ப்பை, இந்த திட்டம் தந்துள்ளது.இவ்வாறு, பிரதமர் பேசினார்.இந்த திட்டத்தில் பயனடைந்த சிலரிடமும், பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது, வீடு கட்டி கொடுத்ததற்காக, பிரதமருக்கு பலரும் நன்றியும், பாராட்டும் தெரிவித்தனர். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டத்தை ரத்து செய்தது, 'தலாக்' நடைமுறைக்கு தடை விதித்தது போன்ற மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கும், அவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.


மருந்து தயாராகும் வரை அதிக கவனம் தேவைமத்திய பிரதேசத்தில் வீட்டுவசதி திட்டத்தை துவக்கி வைத்து, பிரதமர் மேலும் பேசியதாவது:கொரோனா வைரசுக்கு இன்னும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. மருந்து கண்டுபிடிக்கும் வரை, முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் பின்பற்ற வேண்டும். மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். இதைத் தாரக மந்திரமாக பின்பற்ற வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
13-செப்-202020:10:45 IST Report Abuse
skv srinivasankrishnaveni இந்தத்திட்டத்தை மிஸ்யூஸ் பண்ணிருக்கானுக வடிவேலு ஒருசினிமாலே கிநரைக்காணும் என்று காமெடி செய்வாயாக அதுபோல காட்டாதவீட்டுக்கெல்லாம் பொய்யாககணக்குக்காட்டி எல்லோரும்பலகோடிகள் சுருட்டியாச்சு என்று PADICHCHEN
Rate this:
Cancel
13-செப்-202014:57:31 IST Report Abuse
ஆப்பு புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் எத்தனை பேருக்கு வீடு கிடைச்சுது?
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
13-செப்-202004:30:46 IST Report Abuse
J.V. Iyer பிரதமர் இதில் பெருமை கொள்ளலாம். இங்கு தமிழ்நாட்டில் இந்த திட்டத்தில் கொள்ளை பல ஆயிரம் கோடி என்று செய்திகள் வெளியில் வருகிறதே கிணற்றை காணவில்லை என்று திராவிட கண்மணிகள் தீரம் தெரியவில்லைபோலும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X