அமெரிக்க துாதரகத்துக்கு சீனாவில் கடும் கட்டுப்பாடு

Added : செப் 12, 2020
Share
Advertisement

பீஜிங்:தங்கள் நாட்டில் செயல்படும் அமெரிக்க துாதரகங்கள் மற்றும் துாதரக அதிகாரிகளுக்கு, சீனா புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

சமீப காலமாக, அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையேயான உறவு மோசம் அடைந்துள்ளது. தடைவர்த்தகம் தொடர்பான துறைகளில் இரு நாடுகளும் மாறி மாறி கட்டுப்பாடுகள், தடைகளை விதித்தன. அமெரிக்காவின் ஹுஸ்டன் நகரில் செயல்பட்ட சீனா துாதரகத்தின் அதிகாரிகள் உளவு வேலை பார்ப்பதாக கூறி, அந்த துாதரகத்தை அமெரிக்க அரசு மூடியது. இதற்கு பதிலடியாக, சீனாவின் செங்டு நகரில் செயல்பட்டு வந்த அமெரிக்க துாதரகம் மூடப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, அமெரிக்காவில் இயங்கும் சீன துாதரக அதிகாரிகளுக்கு, சில கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில் சீனாவும், தங்கள் நாட்டில் செயல்படும் அமெரிக்க துாதரகங்கள் மற்றும் துாதரக அதிகாரிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஆனால், எந்த மாதிரியான கட்டுப்பாடு என்ற விபரத்தை சீன அரசு தெரிவிக்கவில்லை.

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர்கள் கூறியதாவது:


எதிரொலி



அமெரிக்க அரசு, தங்கள் நாட்டில் செயல்படும் சீன துாதரகங்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் எதிரொலியாக நாங்களும் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளோம். சீனாவில் செயல்படும் அனைத்து அமெரிக்க துாதரகங்கள் மற்றும் அவற்றில் பணியாற்றும் அதிகாரிகளுக்கும் இந்த கட்டுப்பாடுகள் பொருந்தும்.அமெரிக்கா கட்டுப்பாடுகளை தளர்த்தினால், நாங்களும் கட்டுப்பாடுகளை தளர்த்த தயார். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X