போலீஸ் அத்துமீறலை எதிர்த்து போராட்டம்

Added : செப் 12, 2020
Share
Advertisement

போகோட்டா:கொலம்பியாவில், போலீஸ் விசாரணையின் போது ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நடந்து வரும் போராட்டத்தில், 13 பேர் பலியாகினர்; 400க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

தென் அமெரிக்க நாடான, கொலம்பியாவில், கேவியர் ஆர்டன்ஸ் என்பவரை, கடந்த, 9ல், போலீசார் கைது செய்து, விசாரணைக்கு அழைத்து சென்றனர். இவர், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை அடுத்து, கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், விசாரணையின் போது, கேவியர் ஆர்டன்ஸ் உயிரிழந்தார்.இந்த சம்பவம், கொலம்பியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

கடந்த இரண்டு நாட்களாக, ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது ஏற்பட்ட வன்முறை சம்பவங்களில், 13 பேர், பலியாகினர். பொதுமக்கள் தரப்பில், 209 பேரும், போலீஸ் தரப்பில், 194 பேரும் காயம் அடைந்தனர்.'கேவியர், சட்டத்துக்கு விரோதமான முறையில் உயிரிழந்திருந்தால், போலீஸ் சார்பில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்' என, கொலம்பிய ராணுவ அமைச்சர், கார்லோஸ் ட்ருஜிலோ ஹோம்ஸ் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக, ஏழு அதிகாரிகள் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம், விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X