அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல் சவுதி இளவரசர் சாட்சி சொல்ல உத்தரவு

Added : செப் 12, 2020
Share
Advertisement

நியூயார்க்:அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல் தொடர்பாக, சவுதி அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் உள்ளிட்ட இருவர் சாட்சியம் அளிக்க, அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

கடந்த, 20௦1, செப்.,11ல், ஒசாமா பின்லேடனின் அல் - குவைதா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலை படையினர், அமெரிக்காவின் நியூயார்க் நகரில், உலக வர்த்தக மையத்தின் இரு கட்டடங்களை, இரு விமானங்கள் மூலம் மோதி தகர்த்தனர். அத்துடன், அமெரிக்க ராணுவ தலைமையகத்திலும், விமான தாக்குதல் நடந்தது. பயங்கரவாதிகள் கடத்திய ஒரு விமானம், பென்சில்வேனியாவில் விபத்துக்குள்ளானது. உலகையே உலுக்கிய இந்த தாக்குதல் சம்பவங்களில், மூவாயிரம் பேர் உயிரிழந்தனர்.


விசாரணை

அவர்களின் உறவினர்கள் சிலர், பல கோடி ரூபாய் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளனர். நேற்று இந்த வழக்கு, நியூயார்க் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ''அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல்கள் தொடர்பாக, சவுதி அரச குடும்பத்தினர், தற்போதைய அரசு அதிகாரிகள், தாக்குதல் நடந்த போது பணியாற்றிய அரசு அதிகாரிகள் ஆகியோர் சாட்சியம் அளிக்க வேண்டும்,'' என, நீதிபதி சாரா நெட்பர்ன் உத்தரவிட்டார்.

இது குறித்து, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான, வழக்கறிஞர், ஜிம் கிரின்டர் கூறியதாவது: அமெரிக்கா மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்பு வரை, சவுதி அரேபியாவைச் சேர்ந்த சில அரசு அமைப்புகள், ஒசாமா பின்லேடனின் அல்-குவைதா இயக்கத்திற்கு ஆதரவளித்து வந்தன.சவுதி அரேபிய இளவரசர், பந்தர்- பின்- சுல்தான், உளவுத் துறை தலைவராகவும், 1983-2005 வரை அமெரிக்காவுக்கான துாதராகவும் பணியாற்றிஉள்ளார்.


நெருக்கடி

அதனால், பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக, பந்தர்- பின்- சுல்தான் உட்பட, சவுதி அரச குடும்பத்தினர் இருவரிடமும், அரசு அதிகாரிகளிடமும் விசாரிக்க நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.இவ்வாறு, அவர் கூறினார். அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல்களில் தனக்கு தொடர்பு இல்லை என, சவுதி மறுத்து வருகிறது.இந்நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவு, சவுதி அரச குடும்பத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்திஉள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X