செவ்வாய் கிரக ஆய்வு சீராக நடக்கிறது: சீனா

Added : செப் 12, 2020
Share
Advertisement

பீஜிங்:செவ்வாய் கிரக ஆய்வுக்காக அனுப்பியுள்ள விண்கலம் திட்டமிட்டபடி செல்வதாக, சீனா தெரிவித்துள்ளது.

கடந்த ஜூலை, 23ல், சீனா, செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய, 'டியன்வென்-1' என்ற விண்கலத்தை செலுத்தியது. இதில், செவ்வாய் கிரகத்தில் இறங்குவதற்கான, 'லேண்டர்' மற்றும் தரையில் இறங்கி பரிசோதனை மேற்கொள்வதற்கான, 'ரோவர்' வாகனம் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், டியன்வென் - 1 விண்கலம் கடந்த மாதம் முதற்கட்ட சுற்று வட்ட பாதையை கடந்து, செவ்வாய் கிரகத்தை நோக்கி, திடமாக சென்று கொண்டிருக்கிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரியில், விண்கலம், செவ்வாய் கிரகத்தை நெருங்கும் போது, பூமியில் இருந்து, 19.50 கோடி கி.மீ., துாரம் பயணம் செய்திருக்கும் என, சீனா தெரிவித்துள்ளது.

ஆனால், சமீபத்தில் இரண்டு நாள் பயணத்தை முடித்துக் கொண்டு பூமிக்கு திரும்பிய, மறு பயன்பாட்டு விண்ஓடம் தொடர்பான செய்திகளை, சீனா வெளியிடவில்லை. அமெரிக்காவை பின்பற்றி, சீனா முதன் முறையாக இத்தகைய விண்ஓடத்தை அனுப்பியது. அதன் வெற்றி, தோல்வி குறித்த தகவல்களை சீனா வெளிப்படையாக தெரிவிக்காமல் உள்ளதற்கான காரணம் தெரியவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X