'பேச்சு சுதந்திரம் உரிமையாகாது'

Added : செப் 12, 2020
Share
Advertisement

மும்பை:'பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து தெரிவிக்கும் சுதந்திரம் என்பது கட்டுப்பாடுகளற்ற உரிமையல்ல' என, மும்பை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கூட்டணி அரசு அமைந்துள்ளது. மாநிலத் தலைநகர் மும்பையைச் சேர்ந்த, சுசானே ஹோலே என்ற பெண், முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் அவருடைய மகனும், மாநில அமைச்சருமான ஆதித்ய தாக்கரே குறித்து, சமூக வலைதளங்களில் அவதுாராக சில கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

அதையடுத்து, அவர் மீது மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஒரு வழக்கில் கைது செய்யப்பட்ட சுசானே, தற்போது ஜாமினில் உள்ளார். மற்ற இரண்டு வழக்குகளில் கைது செய்யப்படலாம் என்பதால், முன்ஜாமின் கேட்டும், தன் மீதான வழக்குகளை ரத்து செய்ய உத்தரவிடக் கோரியும், அவர், மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், 'பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து தெரிவிக்கும் சுதந்திரம் என்பது, அரசியல் சாசனத்தின் கீழ் முழுமையான உரிமையாகாது. 'அதற்கு சில கட்டுப்பாடுகள் உள்ளன' என, கூறியுள்ளது.அவரை அடுத்த இரண்டு வாரங்களுக்கு கைது செய்வதற்கு இடைக்காலத் தடை விதித்துள்ள உயர் நீதிமன்றம், 'வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராக வேண்டும்' என, உத்தரவிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X