மாஜி கடற்படை அதிகாரியை தாக்கிய சிவசேனா தொண்டர்களுக்கு 'ஜாமின்'

Added : செப் 12, 2020
Share
Advertisement

மும்பை:மஹாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவை விமர்சித்த, 'கார்ட்டூன்' ஒன்றை, பிறருக்கு பகிர்ந்த முன்னாள் கடற்படை அதிகாரி மீது, தாக்குதல் நடத்திய சிவசேனா தொண்டர்களுக்கு, ஜாமின் வழங்கப்பட்டது.

மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான, சிவசேனா, காங்., மற்றும் தேசியவாத காங்., கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. மாநில தலைநகர் மும்பையில் வசித்து வரும், முன்னாள் கடற்படை அதிகாரியான மதன் சர்மா என்பவர், முதல்வர் உத்தவ் தாக்கரேவை விமர்சித்த கார்ட்டூன் ஒன்றை, 'வாட்ஸ் ஆப்' வாயிலாக அனைவருக்கும் பகிர்ந்து உள்ளார்.


கடும் கண்டனம்



இதையடுத்து, அவருக்கு தொலைபேசியில் மிரட்டல்கள் வந்தன. நேற்று முன்தினம், மதன் சர்மாவை, சிவசேனா தொண்டர்கள் கடுமையாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர். இதில், படுகாயம்அடைந்த மதன் சர்மா, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இந்த சம்பவம் குறித்து, காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, இதில் தொடர்புடைய சிவசேனாவின் கமலேஷ் கதம் உள்ளிட்ட கட்சித் தொண்டர்கள் ஆறு பேரை, போலீசார் கைது செய்தனர்.

இந்த தாக்குதலுக்கு, பா.ஜ., தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான, தேவேந்திர பட்னவிஸ், கடும் கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில், கைது செய்யப்பட்ட ஆறு பேருக்கும், நேற்று ஜாமின் வழங்கப்பட்டது.


விடுவிக்கும் அதிகாரம்



ஏழு ஆண்டுகளுக்கும் குறைவான சிறை தண்டனை உள்ள குற்றவாளிகளை, ஜாமினில் விடுவிக்கும் அதிகாரத்தை, காவல் நிலையத்திற்கு உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளதாகவும், அதன் அடிப்படையில் இவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X