செய்தி சில வரிகளில்...இந்தியா

Added : செப் 12, 2020
Share
Advertisement

மணிப்பூர் அமைச்சருக்கு கொரோனா

இம்பால்: மணிப்பூர் பொதுப்பணி மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சர், தொங்கம் பிஸ்வஜித் சிங் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது, நேற்று முன்தினம் உறுதியானது. அவரது மகளும் வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளார். இருவரையும் வீட்டில் தனிமைப்படுத்தி, டாக்டர்கள் சிகிச்சை அளிக்கின்றனர்.

'பேஸ்புக்' நிறுவனத்திற்கு சம்மன்

புதுடில்லி: 'பேஸ்புக்' சமூக வலைதளத்தின், இந்திய துணை தலைவரும், நிர்வாக இயக்குனருமான அஜித் மோகனுக்கு, டில்லி சட்டசபையின் அமைதிக் குழு சார்பில், 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது. அதில், 'நாட்டின் மீது, பொதுமக்களுக்கு வெறுப்பு ஏற்படும் வகையில், பதிவுகளை வெளியிட்ட புகார் தொடர்பாக, செப்., 15ம் தேதிக்குள், நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.

'ஆசியான்' துறைமுக பாதுகாப்பு கூட்டம்

புதுடில்லி: தென்கிழக்கு ஆசிய நாடுகளின் அமைப்பான, 'ஆசியான்' சார்பில், 27வது மண்டல கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற வெளியுறவுத் துறை இணை அமைச்சர், வி.முரளிதரன், துறைமுக பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் கொரோனா தாக்கம் குறித்த, கருத்துகளை பகிர்ந்து கொண்டார். அப்போது, ''துறைமுக பாதுகாப்பு தொடர்பான ஆசியான் கூட்டங்களுக்கும், கடல் சட்டம் தொடர்பான, ஐ.நா.,சபை மாநாட்டிற்கும், இந்தியா இணை தலைவராக இருக்கிறது,'' என்றார்.

கரடிகள் தாக்கி வாலிபர் பலி

கோர்பா: சத்தீஸ்கரின், சூரஜ்பூர் மாவட்டம் பிரேம்நகர் வனச் சரகத்திற்கு உட்பட்ட, அபய்பூரை சேர்ந்த ஷிவ்குமார் பாவ்லே, 25, அவரது நண்பர் சன்னி சிங், 22, ஆகியோர், நேற்று முன்தினம், விவசாய நிலத்திற்கு, வனப் பகுதி வழியாக சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, இரு கரடிகள் அவர்களை தாக்கின. இதில், சன்னி சிங் காயங்களுடன் தப்பிய நிலையில், ஷிவ்குமார் பாவ்லே பலியானார். அவரது குடும்பத்திற்கு, வனத் துறை சார்பில், 6 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

போலீஸ் எஸ்.பி., மீது வழக்கு

மஹோபா: உ.பி.,யின் மஹோபா மாவட்டம் கப்ராய் பகுதியில், 6 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்காததால், தொழிலதிபர் இந்திரகாந்த் திரிபாதி என்பவர் மீது போலீஸ் எஸ்.பி., மணிலால் பட்டீடர், இன்ஸ்பெக்டர் தேவேந்திர சுக்லா ஆகியோர், 8ம் தேதி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், காயமடைந்த அவர் சிகிச்சை பெறுகிறார். போலீஸ் அதிகாரிகள் இருவரும், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். அவர்கள் மற்றும் மேலும் இரு போலீசார் மீது, கொலை முயற்சி, ஊழல் தடுப்பு பிரிவுகளின் கீழ், நேற்று வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X