பொது செய்தி

இந்தியா

டில்லி விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை

Added : செப் 12, 2020
Share
Advertisement

புதுடில்லி:வெளிநாடுகளில் இருந்து வரும் பயணியருக்கு, டில்லி விமான நிலையத்திலேயே கொரோனா பரிசோதனை நடத்துவதற்கான வசதி, செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

'வெளிநாடுகளில் இருந்து டில்லிக்கு வரும் விமான பயணியருக்கு, விமான நிலையத்திலேயே கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கான வசதி ஏற்படுத்தப்படும்' என, உள்நாட்டு விமான போக்குவரத்து அமைச்சகம் சமீபத்தில் அறிவித்து இருந்தது. இந்நிலையில், டில்லி விமான நிலையத்தின் மூன்றாவது புறப்பாட்டு மையத்தில் உள்ள வாகன நிறுத்தும் இடத்தில், கொரோனா பரிசோதனை செய்யும் மையம் ஏற்படுத்தப்பட்டு, செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

இதன்படி, வெளிநாடுகளில் இருந்து வரும் பயணியருக்கு, 2,600 ரூபாய் கட்டணத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. பரிசோதனை முடிவுகள் வரும் வரை, பயணியர், விமான நிலையத்தின் ஓய்வு அறையில் தங்கியிருப்பதற்கு, குறிப்பிட்ட இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு, 2,400 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். பரிசோதனை முடிவு, 46 மணி நேரத்துக்குள் கிடைக்கும்.

சோதனையில், கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படாத பயணியருக்கு, எந்தவிதமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாமல், அவர்கள் சொந்த ஊர்களுக்கு இணைப்பு விமானங்களில் செல்வதற்கு அனுமதி அளிக்கப்படும்.விமான நிலையத்தின் ஓய்வறையில் தங்க விருப்பம் இல்லாதவர்களுக்கு, தனியார் ஓட்டல்களில் தங்க, விதிமுறைக்கு உட்பட்டு அனுமதி அளிக்கப்படும். இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X