செய்தி சில வரிகளில்

Added : செப் 12, 2020
Share
Advertisement

இன்ஜினியர் தற்கொலை

கண்ணுார்: கேரள மாநிலம் கண்ணுாரை சேர்ந்தவர் சரத், 30. இன்ஜினியரான இவர், மேற்காசிய நாடான குவைத்தில் பணியாற்றி வந்தார். சமீபத்தல் கண்ணுார் திரும்பினார். கொரோனா பரவல் காரணமாக, தன் வீட்டில் பின்பகுதியில் உள்ள அறையில், தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார். இந்நிலையில், நேற்று காலை, தொண்டை அறுக்கப்பட்ட நிலையில், சரத் இறந்து கிடந்தார். அவர் அருகில், கத்திரிகோல் கிடந்தது. அவர், தொண்டையை அறுத்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர்.

'மாஜி' டி.ஜி.பி.,க்கு கைது 'வாரன்ட்'

சண்டிகர்: பஞ்சாபில், கடந்த, 1991ம் ஆண்டு, சண்டிகர் சுற்றுலா மற்றும் தொழில் துறை கழகத்தில், இளநிலை பொறியாளராக பணியாற்றி வந்த பல்வந்த் சிங் மல்கானி, மாயமானார். இது தொடர்பான வழக்கு, மொகாலி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக, பஞ்சாப் முன்னாள் டி.ஜி.பி., சுமேத் சிங் சைனியை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, மொகாலி நீதிமன்றம் நேற்று, 'வாரன்ட்' பிறப்பித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X